search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kilakarai"

    கீழக்கரையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகிய முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    கீழக்கரை:

    கீழக்கரை அண்ணா நகரில் வசிப்பவர் மூக்கன் (வயது 75). இவரது மகன் அந்தப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதனை முன்னிட்டு கட்டுமானப் பொருட்கள் வைப்பதற்காக அங்கு குடிசை வீடு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அந்த வீட்டில் மூக்கன் படுத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு குடிசையில் தீப்பிடித்தது.

    இந்த விபத்தில் குடிசையில் இருந்த மூக்கன், உடல் கருகி பரிதாபமாக இறந்தார். கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கீழக்கரையில் வியாபாரி வீட்டில் கதவை உடைத்து 51 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஸ்ரீநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50) இவர் இரண்டு மளிகை கடையும், ஒரு காய்கறி கடையும் நடத்தி வருகிறார். கீழக்கரை தட்டான் தோப்பில் இவருடைய மாமியார் புஷ்பம் என்பவர் நேற்று இறந்து விட்டதை தொடர்ந்து வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 51 பவுன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    கீழக்கரையில் நகராட்சி அலுவலர்கள் நேரடியாக சென்று சொத்து வரி சுய மதிப்பீட்டுபடிவத்தை வீடுகள், கடைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கி வருகின்றனர்.
    கீழக்கரை:

    கீழக்கரை நகரில் உள்ள காலியிடம், வீடுகள், மற்றும் கடைகளுக்கு விதிக்கும் சொத்துவரி மதிப்பை மறுபரிசீலனை செய்யும் பணியை கீழக்கரை நகராட்சி அலுவலர்கள் தொடங்கி உள்ளனர்.

    இதற்காக வீடுகள் தோறும் நகராட்சி அலுவலர்கள் நேரடியாக சென்று சொத்து வரி சுய மதிப்பீட்டுபடிவத்தை வீடுகள், கடைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கி வருகின்றனர். அதில் பெயர், முகவரி, வீட்டின் அளவு, கை பேசி எண், மின் இணைப்பு எண் போன்றவற்றை படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    இவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வரிவிதிப்பு தொகையில் மாற்றம் செய்யப்படும். சமீபத்தில் வரி விதிப்பு மாற்றம் செய்யப்பட்ட வீடுகளுக்கு இது பொருந்தாது.

    மேற்கண்ட தகவலை நகராட்சி (பொறுப்பு) ஆணையாளர் தனலட்சுமி தெரிவித்தார். #tamilnews
    ×