என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kattankulathur"

    • திதாக கட்டப்பட்டு வரும் ரூ.5.25 கோடி மதிப்பிலான கட்டிடத்தையும் அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.
    • மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா உடன் இருந்தனர்.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குமிழி ஊராட்சியி்ல் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார். அப்போது மாணவர் வருகை, வழங்கும் உணவு குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் ரூ.5.25 கோடி மதிப்பிலான கட்டிடத்தையும் அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.

    ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைஞர் மோகன், வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா உடன் இருந்தனர்.

    • தாம்பரம் - காட்டாங்குளத்தூர்- தாம்பரம் இடையே 12 பெட்டிகள் கொண்ட சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கம்.
    • பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில் ஏற்பாடு.

    வரும் திங்கட்கிழமை அதிகாலை தாம்பரம் - காட்டாங்குளத்தூர்- தாம்பரம் இடையே 12 பெட்டிகள் கொண்ட சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 மணி வரை சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்திறங்கும் பயணிகள் இந்த ரெயில்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×