search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamatchi Amman temple"

    • பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு பூஜை, வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அம்மனுக்கு பால்குடம், தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகங்கள் நடைபெற்றன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாவிளக்கு பூஜை, வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று காமாட்சி அம்மனுக்கு பால்குடம், தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகங்கள் நடைபெற்றன. நேற்று மாலை அலகு குத்துதல் நிகழ்ச்சி, பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று வியாழக்கிழமை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தீத்தாம்பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.

    • தூத்துக்குடி சோழபுரம் அருகேயுள்ள புங்கவர்நத்தம் காமாட்சி அம்மன் கோவிலில் 501 திருவிளக்கு பூஜை சிறப்பு பஜனையுடன் நடைபெற்றது.
    • இரவு பாரிவேட்டை, சாமக்கொடை திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சோழபுரம் அருகேயுள்ள புங்கவர்நத்தம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவை யொட்டி உலக மக்கள் அமைதிக்காகவும், நோய் நொடி இல்லாமல், மழை வளம், செல்வ வளம், விவசாயம் செழித்தோங்கிட வேண்டி 501 திருவிளக்கு பூஜை சிறப்பு பஜனையுடன் நடைபெற்றது.

    பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு பாரிவேட்டை, சாமக்கொடை திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் காலையில் அனைத்து வரிதாரர்களும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு காமாட்சி அம்மனுக்கு பொங்கலிட்டனர். மதியம் சிறப்பு பூஜையுடன் திருவிழா நிறைவு பெற்றது. திருவிழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • விநாயகர் வழிபாடு, கணபதி, நவகிரக ஹோமம், மகாலட்சுமி, சரஸ்வதி பூஜைகளும் நடந்தது.
    • காமாட்சியம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.

    பல்லடம் :

    பல்லடம் சித்தம்பலத்தில் காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.இங்கு ஆண்டு தோறும் பொங்கல் பூச்சாட்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    தொடர்ந்து 6 வது ஆண்டு பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 28ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதை தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, கணபதி, நவகிரக ஹோமம், மகாலட்சுமி, சரஸ்வதி பூஜைகளும் நடந்தன. விழாவில்கா மாட்சியம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில், வெவ்வேறு வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.

    நேற்று பொங்கல்,பூச்சாட்டு விழாவில் மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாணம், தேர் பவனி உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ×