என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை நடந்த போது எடுத்த படம்.
தூத்துக்குடி காமாட்சி அம்மன் கோவிலில் 501 திருவிளக்கு பூஜை
- தூத்துக்குடி சோழபுரம் அருகேயுள்ள புங்கவர்நத்தம் காமாட்சி அம்மன் கோவிலில் 501 திருவிளக்கு பூஜை சிறப்பு பஜனையுடன் நடைபெற்றது.
- இரவு பாரிவேட்டை, சாமக்கொடை திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சோழபுரம் அருகேயுள்ள புங்கவர்நத்தம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவை யொட்டி உலக மக்கள் அமைதிக்காகவும், நோய் நொடி இல்லாமல், மழை வளம், செல்வ வளம், விவசாயம் செழித்தோங்கிட வேண்டி 501 திருவிளக்கு பூஜை சிறப்பு பஜனையுடன் நடைபெற்றது.
பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு பாரிவேட்டை, சாமக்கொடை திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் காலையில் அனைத்து வரிதாரர்களும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு காமாட்சி அம்மனுக்கு பொங்கலிட்டனர். மதியம் சிறப்பு பூஜையுடன் திருவிழா நிறைவு பெற்றது. திருவிழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story