search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Job Strike"

    • சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ஓடவில்லை. துறைமுகம் பகுதி வெறிச்சோடி கிடக்கிறது.
    • துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    ராயபுரம்:

    சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் சரக்கு பெட்டகங்களை கையாளும் கண்டெய்னர் டிரெய்லர் லாரிகளுக்கு வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பினர் நேற்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ஓடவில்லை. துறைமுகம் பகுதி வெறிச்சோடி கிடக்கிறது.

    இந்த நிலையில் கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன.

    இதற்கிடையே சென்னை துறைமுக தலைவர் மற்றும் அதிகாரிகள் இன்று பெட்டக முனைய உரிமையாளர்கள், கண்டெய்னர் துறைமுக ஒப்பந்த கூட்ட மைப்பினர் உள்ளிட்ட அமைப்புகளுடன்சென்னை துறைமுகத்தில் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

    இதில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #IndianMedicalAssociation #Doctorsstrike

    நாகர்கோவில்:

    மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் பல்வேறு மருத்துவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள். இன்று தமிழகம் முழுவதும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி, தக்கலை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 400-க்கு மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை.

    புறநோயாளிகள் பிரிவு முன்பு இன்று டாக்டர்கள் வேலை நிறுத்தம் என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாததால் பெரும்பாலானோர் அவதிபட்டனர்.

    ஆஸ்பத்திரிக்கு பிரசவம் மற்றும் அவசர அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்தனர். உள் நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி வழக்கம்போல் செயல்பட்டது. புறநோயாளிகள் கூட்டம் வழக்கம்போல் இருந்தது. நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் புறநோயாளிகள் பிரிவு எந்த ஒரு பாதிப்பும் இன்றி செயல்பட்டது. #IndianMedicalAssociation  #Doctorsstrike

    ×