search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL2018"

    தொடர்ச்சியாக மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய அணியில் இடம்பிடித்த ஒரே வீரர் என்ற பெருமையை கரண் சர்மா பெற்றுள்ளார். #IPL2018 #CSK
    ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் செனனை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.



    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங்கிற்குப் பதில் கரண் சர்மா இடம்பிடித்திருந்தார். இவர் 3 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து முக்கிய வீரரான கேன் வில்லியம்சனை வீழ்த்தினார்.

    சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியில் இடம்பிடித்ததன் மூலம் தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கர்ண் ஷர்மா பெற்றுள்ளார்.



    2016-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்திய சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கரண் சர்மா இடம்பிடித்திருந்தார். கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் கரண் சர்மா இடம்பிடித்திருந்தார். இதன்மூலம் ஐபிஎல் கோப்பையை கர்ண் சர்மா தொடர்ச்சியாக மூன்று முறை ருசித்துள்ளார்.
    ஐபிஎல் 2018 தொடரில் கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷேன் வாட்சனுக்கு கேப்டன் டோனி பாராட்டுகள் தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK #MSDhoni #shockingwatson
    புதுடெல்லி:

    ஐபிஎல் 2018 தொடர் நேற்று முடிவடைந்தது. இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஷேன் வாட்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தந்தார்.

    கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், வெற்றிக்கோப்பையை கையில் வைத்து, தனது மனைவி, குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் டோனி பதிவு செய்திருந்தார். அத்துடன், சென்னை அணிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் மற்றும் மும்பைக்கை நன்றி. 'ஷேன் ஷாக்கிங் வாட்சன்' சிறப்பாக இன்னிங்ஸ் விளையாடி வெற்றியை பெற்று தந்தார். ஷிவா டிராபியை வாங்குவது குறித்து கவலைப்பட வில்லை. அவள் மைதானத்தில் இறங்கி ஓட வேண்டும் என எண்ணினாள்.


    இவ்வாறு டோனி குறிப்பிட்டிருந்தார். வாட்சனை, ஷாக்கிங் வாட்சன் என அவர் குறிப்பிட்டிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரசிகர்களிடையே பெரும் உற்றாகத்தை ஏற்படுத்தியுள்ளது. #IPL2018 #CSK #MSDhoni #shockingwatson
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனிக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். #IPL2018 #RRvCSK
    ஐபிஎல் தொடரின் 43-வது ஆட்டம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிங்க் கலர் ஜெர்ஸி அணிந்து விளையாடினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராஜஸ்தான் அரசுடன் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.



    ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே இந்த போட்டியை காண மைதானம் வந்திருந்தார். இவர் போட்டி தொடங்குவதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்எஸ் டோனிக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
    ×