என் மலர்
நீங்கள் தேடியது "International Tiger Day"
- தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத் தரவுகளின்படி, 306 புலிகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு.
- தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு எனும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
உலகப் புலிகள் நாளில் தமிழ்நாடு பெருமிதத்துடன் முழங்குகிறது!
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத் தரவுகளின்படி, 306 புலிகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு. இந்த வெற்றிக்குக் காரணம், கடினமான பகுதிகளில், முக்கியத்துவம் மிகுந்த புலிகளின் வாழிடங்களைப் பாதுகாக்கும் நமது வனத்துறைப் பணியாளர்களும், வேட்டைத் தடுப்பு அணியினரும்தான்.
வனங்களைப் பாதுகாக்கும் பணியினை மேம்படுத்திட, 1,947 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, வனத்துறையினருக்கு நவீன உடைகள், தொழில்நுட்பக் கருவிகள் வழங்கப்படுகின்றன, கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அயல்-ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றி, புலிகளின் வாழிடங்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. காடுகளின் வளம் மேம்படுத்தப்படுகிறது. கானுயிர் மீதான குற்றங்கள் புரியும் கும்பல்களை அடக்க, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு எனும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை நாம் பாதுகாக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புலி வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியின் போது மாணவர்கள் புலிகள் வாழ காடுகளை பாதுகாத்திட உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கோவில்பட்டி:
நாடு முழுவதும் ஜூலை 29-ந்தேதி புலி இனங்களை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளி சார்பில் சர்வதேச புலிகள் தினவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புலி வேடம் அணிந்து புலிகள் வாழ்வதற்கு தேவையான வாழ்விடங்களை உருவாக்கிடவும், இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், புலி மற்றும் அனைத்து வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு உதவிடவும், புலிகள் வாழ காடுகளை பாதுகாத்திட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கையில் பதாகைகள் ஏந்தி சென்றனர்.
ஐ.சி.எம். பள்ளி செயலாளர் என்ஜினீயர் நடராஜன் தலைமை தாங்கினார். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ராதா வரவேற்றார். கோவில்பட்டி வனச்சரக வனவர் பிரசன்னா கலந்து கொண்டு உலக புலிகள் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் சவுந்தர பாண்டியன், பள்ளி ஆசிரியர்கள் அபிலாதி ரேஸ், சுப்புலட்சுமி, பத்மாவதி, செல்லம்மாள் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.






