என் மலர்
சினிமா

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, புலிக்கு பால் கொடுத்தான் சதீஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வரும் சதீஷ் நேற்று உலக புலிகள் தினத்தையொட்டி புலிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். #Sathish
தமிழ்படம் முதல் பாகத்தின் மூலம் அறிமுகமான சதீஷ் மதராசப்பட்டிணம் படம் மூலம் பிரபலமானார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து சதீஷ் செய்த காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து விட்டார். நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக இருப்பவர். நேற்று உலக புலிகள் தினத்தையொட்டி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் ஒரு புலிக்குட்டியை மடியில் வைத்துக்கொண்டு பாலூட்டும் அவர் அதற்கு முத்தமும் கொடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர் ஒருவர், ‘முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, புலிக்கு பால் கொடுத்தான் சதீஷ்’ எனக் கமெண்ட் கொடுத்துள்ளார். #Sathish #InternationalTigerDay
Next Story






