என் மலர்
நீங்கள் தேடியது "husband stabbed"
கம்பம்:
கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 42). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பகவதி (33). கணேசனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று இது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பகவதி தனது கணவர் மீது சுடு நீரை ஊற்றினார். இதனால் அரிவாள் மனையால் தனது மனைவியின் தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் கணசேன் வெட்டினார்.
இவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பகவதியை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கணேசனும் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் கே.வி.ஆர். நகர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி கோமதி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் செல்வம் நகரில் உள்ள பிரிண்டிங் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.
வேலைக்கு செல்லும் மூர்த்தி தினசரி மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனை கோமதி கண்டித்தார். இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மூர்த்தி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் மனவேதனை அடைந்த கோமதி கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகே உள்ள தாய் ஜோதி வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்று வசித்து வந்தார். பின்னர் மூர்த்தி மனைவியை சந்தித்து இனிமேல் குடிக்க மாட்டேன் என கூறினார். எனவே கோமதி தனது கணவரை தாய் வீட்டில் சேர்ந்து வசிக்க சம்மதித்தார்.
நேற்று வேலைக்கு சென்ற மூர்த்தி நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் நள்ளிரவு கோமதியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கோமதியின் வயிறு, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார்.
இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். மகளின் சத்தம் கேட்டு வந்த கோமதியின் தாய் ஜோதி மூர்த்தியை தடுக்க முயன்றார். அவரையும் மூர்த்தி கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடினார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கோமதி, ஜோதி ஆகியோரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோமதி பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த ஜோதிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவான மூர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






