என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Honda Motor"

    • டாப் வேரியண்ட்கள் ஹோண்டா சென்சிங் மூலம் ADAS செயல்பாடுகளையும் வழங்குகின்றன.
    • 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை அமேஸ் மாடலுக்கு புதிய "கிரிஸ்டல் பிளாக் பேர்ல்" நிறத்தை சேர்த்துள்ளது. இந்தச் சேர்க்கையுடன், அமேஸ் செடான் மாடல் இப்போது லூனார் சில்வர், மீடியோராய்டு கிரே, பிளாட்டினம் ஒயிட், கோல்டன் பிரவுன், ரேடியன்ட் ரெட் மற்றும் அப்சிடியன் புளூ உள்பட மொத்தம் ஏழு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.

    இளம் வாடிக்கையாளர்களிடையே அடர் மற்றும் ஸ்போர்ட்டியர் வண்ணங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், புதிய நிறம் சேர்க்கப்பட்டுள்ளதாக ஹோண்டா கூறுகிறது.

    புதிய நிறம் தவிர, இந்த காரில் வேறு எந்த இயந்திர மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோண்டா அமேஸ் மாடல் தொடர்ந்து 1.2 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.



    அம்சங்களை பொருத்தவரை அமேஸ் மாடல் DRLகளுடன் ஆட்டோமேடிக் LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED ஃபாக் லைட்கள், 15-இன்ச் அலாய் வீல்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-பிளேவுடன் 7 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    பாதுகாப்பிற்கு முன்பக்கத்தில், ஆறு ஏர்பேக்குகள், ISOFIX மவுண்ட்கள் மற்றும் EBD உடன் ABS ஆகியவற்றைப் பெறுகிறது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்கள் ஹோண்டா சென்சிங் மூலம் ADAS செயல்பாடுகளையும் வழங்குகின்றன.

    ஜிஎஸ்டி 2.0 இன் முழு பலனையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக ஹோண்டா உறுதிப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மூன்றாம் தலைமுறை அமேஸ் ரூ. 95,000 வரை விலைக் குறைப்புகளை பெறுகிறது.

    • ஹோண்டாவின் பிரபல மாடல்களான ஆக்டிவா, ஷைன் 125, யூனிகார்ன், சிபி350 மற்றும் பல மாடல்களும் அடங்கும்.
    • பிரீமியம் பைக் பெறும் விலை உயர்வுகளை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

    ஹோண்டா நிறுவனம், அதன் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை, மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து, ரூ.18,887 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஹோண்டா நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு முழு ஜிஎஸ்டி பலன்களை வழங்க உள்ளது.

    புதிய ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ், 350 சிசிக்கு கீழ் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு முந்தைய 28 சதவீதத்திலிருந்து 18 சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளது. ஹோண்டாவின் பிரீமியம் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய பைக்குகள் (350 சிசிக்கு மேல்) தவிர, மற்ற பைக் மாடல்கள் அனைத்தும் விலைக் குறைப்பைக் கண்டுள்ளது.



    இதில் ஹோண்டாவின் பிரபல மாடல்களான ஆக்டிவா, ஷைன் 125, யூனிகார்ன், சிபி350 மற்றும் பல மாடல்களும் அடங்கும். 18 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பைக்குகளுக்கான விலைக் குறைப்பை ஹோண்டா அறிவித்துள்ளது.

    ஆனால் அதன் பிரீமியம் பைக் பெறும் விலை உயர்வுகளை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. புதிய ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ், 350 சிசிக்கு மேல் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு முந்தைய 31 சதவீதத்திலிருந்து 40 சதவீத வரி விதிக்கப்படும்.

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிளை வினியோகம் செய்ய துவங்கியுள்ளது.



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிளை வினியோகம் செய்ய துவங்கியுள்ளது. ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடல் குர்கிராமில் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்தியாவில் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்படும் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலின் துவக்க விலை ரூ.7.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய மோட்டார்சைக்கிள் சி.பி.ஆர்.650எஃப் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சி.பி.ஆர்.650ஆர் மாடலில் 649சி.சி. இன்-லைன் 4-சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 87 பி.ஹெச்.பி. பவர் @11,500 ஆர்.பி.எம். மற்றும் 601 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.



    ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலில் டூயல்-ஹெட்லேம்ப் வடிவமைப்பு, எக்ஸ்போஸ்டு என்ஜின் மற்றும் டெயில் பகுதி உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டிள்பார்கள், 30எம்.எம். அளவில் குறைக்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செலக்டபிள் டார்க் கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 2019 ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலின் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டூயல் டிஸ்க் செட்டப், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. புதிய ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடல் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் மற்றும் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
    ×