search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gujarat fortune giants"

    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் குஜராத்தை 41 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ProKabaddiLeague #GujaratFortuneGiants #BengaluruBulls
    கொச்சி:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
     
    நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் உ.பி. யோதா 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில யு மும்பாவை தோற்கடித்தது. மற்றொரு சுற்றில் தபாங் டெல்லி 39 - 28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை விரட்டியது. அதன்மூலம் யு மும்பா, பெங்கால் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு கொச்சியில் நடைபெற்றது. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த குஜராத் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் அதிரடியாக ஆடினர். முதலில், குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக ஆடியதால் முதல் பாதியில் 14 - 13 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது.

    ஆனால், இரண்டாவது பாதியில் பெங்களூரு அணி அபாரமாக ஆடியது. இதனால் ஆட்டத்தின் முடிவில் 41 - 29 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் தோற்ற குஜராத் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddiLeague #GujaratFortuneGiants #BengaluruBulls
    புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் இன்று நடைபெற்ற இண்டர்ஜோன் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 29 - 27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது குஜராத் அணி. #ProKabaddi #GujaratFortuneGiants #TeluguTitans
    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனாலும், முதல் பாதியின் முடிவில் 17 -12 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணி முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் போராடினர்.

    இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 29 -27 என்ற கணக்கில் குஜராத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. #ProKabaddi #GujaratFortuneGiants #TeluguTitans  
    புரோ கபடி லீக் போட்டியில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியை 36 - 26 என்ற கணக்கில் வீழ்த்திய மும்பை அணி வெற்றி பெற்றது. #ProKabaddi #UMumba #GujaratFortuneGiants
    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

    புதுடெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் யு மும்பை அணியும், குஜராத் பார்சுன் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 17 - 14 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் மும்பை அணிக்கு குஜராத் அணி வீரர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.

    இறுதியில், பரபரப்பான கட்டத்தில் மும்பை அணி 36 - 26 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது.

    இந்த வெற்றி மூலம் மும்பை அணி பதிமூன்றாவது வெற்றியை பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. #ProKabaddi #UMumba #GujaratFortuneGiants
    புரோ கபடி லீக் போட்டியில் உபியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்திய குஜராத் அணி தனது நான்காவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
    லக்னோ:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உபி மாநிலத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூரும், குஜராத்தும் மோதின.

    ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே குஜராத் அணி சிறப்பாக விளையாடியது. இதனால் முதல் பாதியில் அந்த அணி முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் குஜராத் அபாரமாக ஆடியது. அவர்களின் ஆட்டத்துக்கு ஜெய்ப்பூர் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில், ஜெய்ப்பூர் அணியை 36 - 25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணிக்கு நான்காவது வெற்றி ஆகும். #ProKabaddi 
    ×