search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green crackers"

    • எங்கள் கடையில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் வெடிக்கக் கூடிய பசுமை பட்டாசுகள் ஏராளம் உள்ளன.
    • குறைந்த விலையில் விதவிதமான பட்டாசுகள் வாங்குவதற்கு எங்கள் கடைக்கு வாருங்கள்.

    சென்னை:

    பாண்டிபஜார் எஸ்.ஜி. தமிழரசனின் பட்டாசு கடை நடத்தும் பாபா சுரேஷ் பட்டாசு கடைகள் இந்த ஆண்டு தி.நகரில் 3 இடங்களிலும், வடபழனியில் ஒரு இடத்திலும் மொத்தம் 4 இடங்களில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    பாண்டிபஜார் தணிகாசலம் ரோடு, ஜி.என்.செட்டி ரோடு கண்ணதாசன் சிலை அருகில், கோபால கிருஷ்ணன் தெரு மற்றும் வடபழனி துரைசாமி ரோடு (ஜே.ஆர்.கே.பள்ளி அருகில்) பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு ஸ்டாண்டர்டு ரக பட்டாசுகள் ஏராளம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பசுமை ரக பட்டாசுகளும் எண்ணற்ற ரகங்களில் கிடைக்கிறது.

    2 ஆயிரம் வாலா பட்டாசுகள், 5,000, 10,000 வாலா பட்டாசுகள், அணுகுண்டு, கம்பி மத்தாப்புகள், சரவெடிகள், புஸ்வானம், துப்பாக்கி வெடிகள், மியூசிக் வெடிகள், சூரிய காந்தி யானை வெடிகள், சிறுவர்கள் வெடிக்கும் வெடிகள், தரசக்கரம், ராக்கெட் வெடிகள் குறைந்த விலையில் விற்கப்படுகிறது

    கடையை நிர்வகிக்கும் தமிழரசனின் மருமகன் பாண்டிபஜார் பாபா சுரேஷ் கூறியதாவது:-

    எங்கள் கடையில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் வெடிக்கக் கூடிய பசுமை பட்டாசுகள் ஏராளம் உள்ளன.

    இந்த வகை பட்டாசுகளுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. ஸ்டாண்டர்டு ரக பட்டாசுகள் பல ரகங்களில் எண்ணற்ற வகையில் வர வழைத்துள்ளோம். குறைந்த விலையில் விதவிதமான பட்டாசுகள் வாங்குவதற்கு எங்கள் கடைக்கு வாருங்கள். மனம் விரும்பும் பட்டாசுகளை வாங்கிச் செல்லுங்கள் தீபாவளியை கொண்டாட எங்களது கடையை தேர்ந்தெடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.
    • சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பட்டாசு வெடிக்கும் நேரம்

    தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே நேரத்தில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் குழந்தைகள், பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்ட முதியவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    உச்ச நீதிமன்ற அறிவுறுத்தியுள்ளபடி தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    விழிப்புணர்வு

    சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். எனவே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள், குடிசை பகுதி மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×