என் மலர்
நீங்கள் தேடியது "Government Schemes"
- மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சேரும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும் என மத்திய மந்திரி அறிவுறுத்தினார்.
- வேளாண்மை துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி ஜான் பெர்லா தலைமையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வீடுகள் குறித்தும், பண்ணை குட்டை அமைத்தல், புதிய குளங்கள் அமைத்தல் போன்ற திட்ட பணிகள் குறித்து மத்திய மந்திரி கேட்டறிந்தார்.
கிராமப் பகுதிகளில் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை அதிகளவு மேற்கொள்ள திட்டமிட வேண்டும் என அலுவலர்களிடம் தெரிவித்தார். வேளாண்மை துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
விவசாயிகளின் தேவைக்கேற்ப திட்டங்களை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். மத்திய மந்திரி பேசுகையில், மாணவர்களின் கல்விக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உயர் கல்வி படிக்கின்ற மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உரிய காலத்திற்குள் கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன்களை காலதாமதம் இன்றி கிடைக்க அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கல்வியின் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி வேண்டு மானாலும் மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக் மன்சூர், கோட்டாட்சியர்(பொறுப்பு) மரகதநாதன், பரமக்குடி கோட்டாட்சியர் முருகன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசு திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என பா.ஜ.க. கட்சி மாநில நிர்வாகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கான மானியம் ரூ.50 ஆயிரம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.
ஆர்.எஸ்.மங்கலம்
பா.ஜ.க. கட்சி மாநில நிர்வாகி வேலூர் இப்ராஹிம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
நேற்று ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி பகுதிக்கு வருகை தந்தார். அவருக்கு ஆர்.எஸ்.மங்கலம் பா.ஜ.க. கட்சியின் ஒன்றிய தலைவர் நரசிங்கம் தலைமையில் சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் அஜ்மல்கான், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. அணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சசி கனி, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பொதுச்செயலாளர்கள் செந்தில்குமார், கிஷோர், ஒன்றிய பொருளாளர் பாண்டித்துரை ஆகியோர் முன்னிலையில் திருப்பாலைக்குடி பழங்கோட்டை பஸ்நிறுத்தம் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்பாலைக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சென்று ஊராட்சி மன்ற தலைவர் முகமது உமர் பாரூக் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களை சந்தித்து பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை பிரிவினருக்கான திட்டம், மகளிர்குழு தொழில் தொடங்குவதற்கான மானியத்துடன் கூடிய கடன் திட்டம் குறித்து விளக்கினார்.சிறுபான்மையினருக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கான மானியம் ரூ.50 ஆயிரம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருப்பாலைக்குடி பாண்டி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருப்பாலைக்குடி மாரியம்மன்கோவில் காந்திநகர் கிராம தலைவர் தமிழ்கண்ணன், செயலாளர் ஆதிரைமன்னன் ஆகியோர் தலைமையில் மீனவர்சங்கம் சார்பாக வேலூர் இப்ராஹிம்க்கு பரிவட்டம் கட்டப்பட்டது.
பின்னர் அ.தி.மு.க. நகர செயலாளர் குட்லக் ரஹ்மத்துல்லாவை சந்தித்து மத்திய அரசு முஸ்லீம் சிறுபான்மையினருக்கான கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து இத்திட்டங்கள் குறித்து முஸ்லிம் மக்களிடையே எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சசிகுமார், ஆர்.எஸ்.மங்கலம் இளைஞரணி தலைவர் தம்பிதுரை, ஊடகப்பிரிவு செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் சந்தை யினை திறந்து வைத்தார்.
- போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் மாகிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மலையாள மொழி பேசும் மக்களின் திருவிழாவான ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் சந்தை யினை திறந்து வைத்தார்.
பின்னர் உஸ்மான் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாலை மாகி அரசு சென்ட்ரல் ஹாலில் நடை பெற்ற அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு மாகி பிராந்தியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் பரம்பத், அசோக் பாபு, மாகி பிராந்திய நிர்வாகி சிவராஜ் மீனா,போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரத்தினவேல், ஜெயக்குமார், தொகுதி தலைவர் தினேஷன், மனோஜ், சுனில், ரஜீஷ், பிரதீஷ், திரிஜேஷ், ஜெயேந்திரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.






