search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja smuggling case"

    • வழக்கு விசாரணை விழுப்புரம் போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • 2ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    விழுப்புரம்:

    கடந்த 2021 -ம் ஆண்டு விழுப்புரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் விழுப்புரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை செய்தபோது தூக்கனாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி முருகனை பிடித்து விசாரணை செய்ததில் அவரிடம் 2.200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதி தேன்மொழி கஞ்சா கடத்திய முருகனுக்கு 2ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்றொரு கஞ்சா கடத்திய வழக்கில் 1 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    கொடைக்கானலில் காரில் கஞ்சா கடத்திய கேரள கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கல்லூரி மாணவர்கள், வாலிபர்களை குறி வைத்து சிலர் கஞ்சா, போதை காளான் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர். போலீசாரின் கெடுபிடியால் தற்போது போதை காளான் பெருமளவில் கட்டுபடுத்தப்பட்டது.

    இருந்தபோதும் கேரள மாணவர்கள் இங்குள்ள ரிசார்ட்டுக்கு வந்து மறைமுகமாக கஞ்சா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருகின்றனர். கொடைக்கானல் போலீசார் ரோந்து சென்றபோது வட்டக்கானல் சாலையில் ஒரு கார் வந்தது. அதில் இருந்த வாலிபர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்ணுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் தங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் ஆகியோர் அந்த வாலிபர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 பேரும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர்ஷா (வயது 23), அன்சர் (24), ராகுல் (21) என தெரிய வந்தது. மேலும் அவர்களின் பையை சோதனையிட்டதில் 3 பொட்டலங்களில் 4 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கஞ்சாவை கடத்தி வந்தனரா? அல்லது இங்கிருந்து கஞ்சாவை வாங்கி சென்று விற்பனை செய்வதற்கு சென்றனரா? என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×