என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gang War Shooting"

    • திடீரென அங்கு தோன்றிய கட்டம் போட்ட சட்டை அணிந்த நபர் நாதிரை நோக்கி சுட்டுள்ளான்.
    • சுடுவதற்கு முன்னர் அந்த ஏரியாவில் 1 மணி நேரமாக அவர்கள் நோட்டம் விட்டுள்ளதாகத் தெரிகிறது.

    டெல்லியில் ஜிம் ஓனர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அமைத்துள்ள SHARX ஜிம் வாசலில் வைத்து நேற்று இரவு அந்த ஜிம்மின் உரிமையாளரான ஆபிகானிய வம்சாவளியை சேர்ந்த நாதிர் ஷா [35 வயது] துப்பாக்கி ஏந்திய நபரால் 11 முறை சுடப்பட்டார். அதில் 8 குண்டுகள் அவரது உடலைத் துளைத்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக கிடைத்த சிசிடிவி காட்சியில், நாதிர் ஷா இரவு வேலையில் தனது கருப்பு suv காரின் அருகே நின்றுகொண்டு மற்றொரு நபருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது திடீரென அங்கு தோன்றிய கட்டம் போட்ட சட்டை அணிந்த நபர் நாதிரை நோக்கி சுட்டுள்ளான். 11 முறை சுட்டதும் தன்னுடன் வந்த மற்றொரு நபருடன் பைக்கில் ஏறி தப்பினான். சுடுவதற்கு முன்னர் அந்த ஏரியாவில் 1 மணி நேரமாக அவர்கள் நோட்டம் விட்டுள்ளதாகத் தெரிகிறது.

    கொலை செய்யப்பட்ட நாதிர் ஷா குற்றப் பின்னணி கொண்ட நபர் ஆவர். கொலை நடந்த பகுதியில் சமீப காலமாக கேங் வார் நடந்து வருவதால் போலீசார் விசாரணை நடத்த திணறி வருகிறனர். இந்த கொலைக்கு லாரன்ஸ் பிசினாய் கேங் உடன் தொடர்புடைய ரோகித் கோத்ரா என்ற கேங்ஸ்டர் சோசியல் மீடியாவில் பொறுப்பேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    டெல்லியின் புராரி பகுதியில் பட்டப்பகலில் இரு ரவுடி கும்பல் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு அப்பாவி பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். #DelhiGangWar

    புதுடெல்லி:

    டெல்லியின் புராரி பகுதியில் நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் காரில் வந்த சிலர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிலரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோட முயற்சித்தனர்.

    இந்த தூப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ பதிவுகள் தற்போது இணைய தளத்தில் பரவி வருகின்றன.
    ×