search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "friend killed"

    செல்போனில் கிண்டலாக பேசியதை வெளியிட்டதால் நண்பனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருத்தணி:

    திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (18). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடராமன் (26). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    நேற்று முன்தினம் இருவரும் விளையாட்டாக, தாழவேடு மக்களை பற்றி வெங்கடராமன் கிண்டல் செய்து பேசினார். அதை விஜய் அலைபேசி மூலம் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டார்.

    இதையடுத்து தாழவேடு காலனி மக்கள், நேற்று காலை திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் தாழவேடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சமரசம் செய்ய வந்த திருத்தணி போலீசாரிடம் வெங்கடேசனை கைது செய்து வேண்டும் என வலியுறுத்தினர். இதை அறிந்ததும், வெங்கடராமன், விஜய் ஆகியோர் தலைமறைவாகினர். இதையடுத்து வெங்கடராமனின் தந்தை கன்னியப்பனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    நேற்று இரவு விஜய், வெங்கடராமன் தமிழக- ஆந்திரா எல்லையான பொன்பாடி அருகே வயல் வெளியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். போதையில் வெங்கடராமன், உன்னால் தான் நான் வீடியோவில் நடித்தேன், என் தந்தையை போலீசார் பிடித்துச் சென்றனர் என கூறி கட்டையால் விஜய்யை தாக்கி, கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

    விஜய் இறந்ததை உறுதி செய்ததும் வெங்கடராமன் திருத்தணி போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    பழனி லாட்ஜில் டிரைவரை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் 10 நாட்களுக்குப் பிறகு கைது செய்தனர்.

    பழனி:

    ஊட்டி அருகில் உள்ள இடுதட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது27). தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7-ந் தேதி தனது நண்பரான பாரதி (வயது33) உடன் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். மது அருந்தி பேசிக்கொண்டிருந்தபோது பாரதி, உன் மனைவி மிகவும் அழகானவர். அவரிடம் தகராறு செய்யாதே. உன்னைப்போல் எனக்கு மனைவி கிடைத்திருந்தால் அவரை அருமையாக வைத்திருப்பேன் என வர்ணித்து பேசினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் என் மனைவியை பற்றி எப்படி என்னிடமே வர்ணித்து பேசலாம் என கேட்டு தகராறு செய்தார். இதனால் பாரதி அவரை சரமாரியாக தாக்கினார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாரதி உறவினர்களுக்கு போன் செய்து ராமச்சந்திரன் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினார். இதனையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். ராமச்சந்திரனின் சகோதரர் வாசுதேவன் தனது அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாக பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுத்து கோவை அரசு மருத்துவர்களால் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

    பாரதியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டர். இதனையடுத்து போலீசார் கொலை வழக்குபதிவு செய்து பாரதியை கைது செய்தனர்.

    ×