search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Founder's Day"

    • நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியின் முன்னாள் மாணவர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார்.
    • கே.ஆர்.ராமசாமி நினைவு தகுதிசார் கல்வி உதவித்தொகை நடப்பு கல்வியாண்டில் கே.ஆர்.கல்வி நிறுவனங்களில் பயிலும் 28 மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனத்தலைவர் கே.ராமசாமியின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித்திட்ட மாண வர்கள் சார்பில் கோவில்பட்டி பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், செண்பகவல்லி அம்மன் கோவில் மற்றும் அரசு மருத்து வமனை போன்ற பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து, திருவனந்தபுரம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் திரவ இயக்க திட்ட மையத்தின் இயக்கு னர் நாராயணன் இந்திய விண்வெளி திட்டங்கள் 'நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்பில் நிறுவனர் தின சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

    மேலும், பெங்களூரு, இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் ஆண்டெனா சிஸ்டம்ஸ் பிரிவு தலைவரும், நேஷனல் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவருமான செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில், கே.ஆர்.ராமசாமி நினைவு தகுதிசார் கல்வி உதவித்தொகை நடப்பு கல்வியாண்டில் கே.ஆர்.கல்வி நிறுவன ங்களில் பயிலும் 28 மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    முன்னதாக, நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலி டெக்னிக் கல்லூரி மற்றும் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு கே.ஆர்.குழும மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் எ.ஷண்மதி மற்றும் எ.நிதிஷ் ராம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் வரவேற்று பேசினார். லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் சண்முகவேல் தலைமை உரையாற்றினார். லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ராஜேஸ்வரன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

    கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் எஸ்.மதிவண்ணன் நன்றி கூறினார்.

    • கனரா வங்கியின் 117-வது நிறுவனர் தினவிழா நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வங்கி சார்பில் பொதிகை நகர் ஊனமுற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 5 மாற்றுத்தினாளிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் ஒரு மாத மளிகை பொருட்கள் வழங்கினார்.

    நெல்லை:-

    கனரா வங்கியின் 117-வது நிறுவனர் தினவிழா நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் மண்டல உதவி பொது மேலாளர் கனகாம்பரன் வரவேற்று பேசினார்.

    மண்டல அலுவலக துணை பொதுமேலாளர் தில்லி பாபு வங்கி நிறுவனர் தினவிழாவின் முக்கியத்துவம் மற்றும் வங்கியின் தற்போதைய சந்தை நிலவரம் பற்றி பேசினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் கலந்து கொண்டார். அவர் வங்கி சார்பில் பொதிகை நகர் ஊனமுற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 5 மாற்றுத்தினாளிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் ஒரு மாத மளிகை பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து சங்கர்நகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. முடிவில் மண்டல மேலாளர் அன்பு செழியன் நன்றி கூறினார்.

    ×