நெல்லையில் கனரா வங்கி நிறுவனர் தினவிழா

கனரா வங்கியின் 117-வது நிறுவனர் தினவிழா நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.வங்கி சார்பில் பொதிகை நகர் ஊனமுற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 5 மாற்றுத்தினாளிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் ஒரு மாத மளிகை பொருட்கள் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிளை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் வழங்கிய காட்சி. அருகில் மண்டல அலுவலக துணை பொதுமேலாளர் தில்லி பாபு, உதவி பொது மேலாளர் கனகாம்பரன் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிளை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் வழங்கிய காட்சி. அருகில் மண்டல அலுவலக துணை பொதுமேலாளர் தில்லி பாபு, உதவி பொது மேலாளர் கனகாம்பரன் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
Published on

நெல்லை:-

கனரா வங்கியின் 117-வது நிறுவனர் தினவிழா நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் மண்டல உதவி பொது மேலாளர் கனகாம்பரன் வரவேற்று பேசினார்.

மண்டல அலுவலக துணை பொதுமேலாளர் தில்லி பாபு வங்கி நிறுவனர் தினவிழாவின் முக்கியத்துவம் மற்றும் வங்கியின் தற்போதைய சந்தை நிலவரம் பற்றி பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் கலந்து கொண்டார். அவர் வங்கி சார்பில் பொதிகை நகர் ஊனமுற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 5 மாற்றுத்தினாளிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் ஒரு மாத மளிகை பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து சங்கர்நகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. முடிவில் மண்டல மேலாளர் அன்பு செழியன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com