search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engaged girl"

    • சின்ராஜ் ரம்யாவுடன் நீண்ட நேரம் பேசிவிட்டு அதன்பிறகு அங்கிருந்து சென்றுள்ளார்.
    • சின்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெல்லம்பட்டி பகுதியை சேர்ந்த கோபால்- மாசாணி தம்பதியரின் மகள் ரம்யா(வயது 23). இவருக்கும் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த கோபால் மகன் சின்ராஜ் (25) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இதையடுத்து ரம்யா வும், சின்ராஜூவும் தினமும் செல்போனில் பேசி வந்தனர். நேற்று ரம்யாவின் பெற்றோர் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை வழங்குவதற்காக சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த சின்ராஜ் ரம்யாவுடன் நீண்ட நேரம் பேசிவிட்டு அதன்பிறகு அங்கிருந்து சென்றுள்ளார்.

    நேற்று மாலை ரம்யாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரம்யா வீட்டிற்குள் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இன்று காலை ரம்யாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    சின்ராஜ் பேசி விட்டு சென்ற பிறகுதான் ரம்யா தற்கொலை செய்துள்ளார். எனவே சின்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    திண்டுக்கல் அருகே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்தியவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள காணப்பாடி புதுப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது25). திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் எரியோடு கோவிலூர் அருகில் உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த கார் டிரைவர் முத்துவேல் என்பவருக்கும் திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. இரு வீட்டாரும் சம்மதத்தின்பேரில் 3 மாதம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என நிச்சயம் செய்யப்பட்டது.

    ஆனால் கார்த்திகாவிற்கு முத்துவேலை பிடிக்க வில்லை என்று தனது வீட்டில் கூறி உள்ளார். இதனால் முத்துவேல் குடும்பத்தினர் பலமுறை அவர்களிடம் தொடர்பு கொண்டும் எவ்வித பதிலும் கூறாமல் இருந்து வந்தனர். மேலும் திருமண பேச்சுவார்த்தை நடத்துவதையும் தவிர்த்தனர். இதனால் முத்துவேல் தனது நண்பர் உதவியுடன் கார்த்திகாவை கடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    இன்று காலை தனது நண்பர் பெரியசாமியுடன் காரில் கார்த்திகா வீட்டு அருகே காத்திருந்தார். அவர் வேலைக்கு செல்லும்போது திடீரென அவரை காருக்குள் இழுத்து கடத்த முயன்றனர். அப்போது கார்த்திகா கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்டிற்கு தகவல் அனுப்பி கார் மடக்கி பிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×