search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elocution competition"

    • சிவகங்கை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை-பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு பரிசு தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு இப்போட்டிகள் வருகிற 10-ந் தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம், மருதுபாண்டியர் நகரில் உள்ள சமுதாயக்கூடத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி நடை பெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

    ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரால் பரிந்துரைக்கப்படுவார்கள். சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மட் டுமே இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.

    ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான தலைப்பு கள் போட்டிகள் தொடங்கும் முன் அறிவிக்கப்படும். மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன், சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளிக்க வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை நேரிலோ அல்லது தொலை பேசி வாயிலாகவோ (04575-241487, 99522 80798) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

    திருப்பூர் :

    தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான 14-11-2022 (திங்கட்கிழமை) அன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் கீழ்க்காணும் தலைப்புகளில் நடத்தப்பட உள்ளன.

    பள்ளி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு - பேச்சுப் போட்டிக்கானத் தலைப்புகள் ) வருமாறு :- குழந்தைகள் தின விழா , ரோசாவின் ராசா ,ஜவகர்லால் நேருவின் தியாகங்கள் , நூல்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு,இளைஞரின் வழிகாட்டி நேரு

    கல்லூரி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு - பேச்சுப் போட்டிக்கானத் தலைப்புகள் வருமாறு :- இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு ,,நேரு கட்டமைத்த இந்தியா ,காந்தியும் நேருவும்*ந,ருவின் பஞ்சசீலக் கொள்கை ,உலக அமைதிக்கு நேருவின் தொண்டு , அமைதிப்புறா - நேரு.

    இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி -கல்லூரி மாணவர்களுக்குமாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2,000 என்ற வகையிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு தலா ரூ.2000 வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை நடத்திய அண்ணா பிறந்த நாள், அண்ணல் காந்தியடிகள் நினைவுநாள் பேச்சுப்போட்டிகள் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் லெரின்டிரோஸ் பாராட்டினர்

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை நடத்திய அண்ணா பிறந்த நாள், அண்ணல் காந்தியடிகள் நினைவுநாள் பேச்சுப்போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பள்ளி, மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சன்எபி முதலிடமும், அண்ணல் காந்தியடிகள் நினைவு போட்டியில் பள்ளி மாணவி தர்ஷினி முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் லெரின்டிரோஸ், தலைமை ஆசிரியர் அருள்பர்னாந்து மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டினர். பேச்சுப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ. 5 ஆயிரம் கலெக்டர் வழங்கினார்.

    ×