search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நேரு பிறந்தநாளையொட்டி பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி  14-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    நேரு பிறந்தநாளையொட்டி பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி 14-ந் தேதி நடக்கிறது

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

    திருப்பூர் :

    தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான 14-11-2022 (திங்கட்கிழமை) அன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் கீழ்க்காணும் தலைப்புகளில் நடத்தப்பட உள்ளன.

    பள்ளி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு - பேச்சுப் போட்டிக்கானத் தலைப்புகள் ) வருமாறு :- குழந்தைகள் தின விழா , ரோசாவின் ராசா ,ஜவகர்லால் நேருவின் தியாகங்கள் , நூல்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு,இளைஞரின் வழிகாட்டி நேரு

    கல்லூரி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு - பேச்சுப் போட்டிக்கானத் தலைப்புகள் வருமாறு :- இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு ,,நேரு கட்டமைத்த இந்தியா ,காந்தியும் நேருவும்*ந,ருவின் பஞ்சசீலக் கொள்கை ,உலக அமைதிக்கு நேருவின் தொண்டு , அமைதிப்புறா - நேரு.

    இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி -கல்லூரி மாணவர்களுக்குமாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2,000 என்ற வகையிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு தலா ரூ.2000 வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×