என் மலர்
நீங்கள் தேடியது "Elderly jewelry theft"
கோவை:
ரத்தினபுரியை சேர்ந்தவர் ராமாத்தாள்(வயது 60). இவர் நேற்று டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது தனது 5 பவுன் செயினை ஒரு மணிபர்சில் வைத்திருந்தார். பஸ், அரசு ஆஸ்பத்திரி பகுதியில் வந்த போது ஒரு பெண் ராமாத்தாளிடம் இருந்த மணிபர்சை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து நைசாக இறங்க முயன்றார். இதைக்கண்ட ராமாத்தாள் சத்தம் போடவே பயணிகள் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் காரமடையை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி அனிதா தேவி(33) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 5 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோயம்பேடு:
கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வரும் வயதானவர்களை குறி வைத்து பெண் ஒருவர், கலைஞர் நிதி உதவி தொகை ரூ.10 ஆயிரம் தருகிறார்கள் என்று கூறி அவர்களிடம் இருந்து நகைகளை பெற்று தலைமறைவாகி விடும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.
இதுபற்றி நகைகளை ஏமாந்த சிலர் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது நூதன முறையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட ரெட்டேரி கண்ணகி நகர் திருவள்ளூர் தெருவைச் சேர்ந்த லட்சுமி (40) என்ப வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அவர் வெளியூரில் இருந்து வரும் வயதான பெண்களை குறிவைத்து நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி அவர்கள் அணிந்து இருந்த நகையை ஏமாற்றி வாங்கிக் கொண்டு தலைமறைவாகி வருவது தெரிந்தது. அவரிடமிருந்து 1 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.






