search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dukes Ball"

    • வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது.
    • டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இதற்கான இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் டியூக் பந்துகளே பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போதே நாங்கள் டியூக் பந்துகளில் பயிற்சியை தொடங்கிவிட்டதாக இந்திய வீரர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இந்திய வீரர் அக்சர் படேல் கூறியதாவது:-

    வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது. அதேபோல் தான் எஸ்ஜி பந்துகளில் வீசிவிட்டு டியூக் பந்துகளில் பந்துவீசுவதும் எளிதள்ள. அதிக நேரம் ஸ்விங் ஆகும் தன்மை உடைய டியூக் பால்களை வைத்து ஐபிஎல் தொடரின் போதே பயிற்சியை தொடங்கிவிட்டோம். இதற்காகவே டியூக் பால்களை அதிகளவில் ஆர்டர் செய்து பயிற்சியை மேற்கொண்டோம்.

    ஏனென்றால் டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே, அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும். இங்கிலாந்தில் ஆட்டம் நடப்பதால், லைன் மற்றும் லெந்தில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறோம்.

    இங்கிலாந்தில் வேகப்பந்துவீச்சே அதிகமாக எடுபடும் என்பதால், அணியில் ஒரு ஸ்பின்னருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். எனக்கு வாய்ப்பு கிடைப்பது பற்றி கவலைப்படாமல் பயிற்சியில் தீவிரமாக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்விங் பந்தை சிறப்பாக எதிர்கொண்டு விளையாட எந்தவொரு சர்வதேச அணியும் தற்போது இல்லை என்று வாட்சன் தெரிவித்துள்ளார்.
    ஸ்விங் பந்து வீச்சிற்கு சொர்க்கமாக விளங்கும் இங்கிலாந்து மண்ணில் எந்தவொரு வெளிநாட்டு அணிகளும் சிறப்பாக விளையாடுவது கடினம். அங்குள்ள சிதோஷண நிலைக்கு ஏற்றவாறு வீரர்கள் உடனடியாக அவர்களை தயார்படுத்துவது சிரமம் என்று முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறுகையில் ‘‘ஸ்விங் பந்தை விளையாடுவது அவ்வளவு எளிதானது கிடையாது. ஆஸ்திரேலியா அடுத்த வருடம் இங்கிலாந்து செல்கிறது. இது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். சீதோஷண நிலைக்கு ஏற்பட்ட பந்து ஸ்விங் ஆகும் ஒரே நாடு இங்கிலாந்து மட்டுமே. ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒருமுறையும் இங்கிலாந்தில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தோடு அங்கு செல்ல முடியாது.



    தற்போதைய நிலையில் எந்தவொரு வெளிநாட்டு அணியும் இங்கிலாந்தில் ஸ்விங் பந்தை சிறப்பாக விளையாடும் என்று நான் நினைக்கவில்லை. இந்திய அணி தற்போது அங்கு தோல்வியடைவது வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாட முடியாது என்பதை பிரதிபலிப்பதாகும்.

    இந்திய பேட்ஸ்மேன் சாதனைகளை எடுத்து பார்த்தீர்கள் என்றால், ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடியிருப்பார்கள். விராட் கோலி ஏராளமான ரன்கள் அடித்துள்ள நிலையில், கே எல் ராகுல், ரகானே சதங்கள் அடித்துள்ளனர்.
    ×