search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dravida Parties"

    தமிழகத்தில் திராவிட கட்சிகள் கல்வி என்ற பெயரில் கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். #BJP #HRaja
    ராயபுரம்:

    சென்னை கொருக்குப்பேட்டை மூப்பனார் நகர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் இன்று அன்னதானம் நடந்தது.

    இதனை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்து மதத்திற்கு மிகப்பெரிய ஆபத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை தவிர்க்க வேண்டும். மத ஊர்வலத்திற்கு அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை.

    உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். இதை வலியுறுத்தி என் தலைமையின்கீழ் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் நடைப்பெறுகிறது.

    தமிழகத்தில் திராவிட கட்சிகள் கல்வி என்ற பெயரில் கோவில் சொத்துக்களை கொள்ளையடித்து வருகின்றன.

    மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்து சொல்லி தேர்தலை சந்திப்போம்.

    மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை பொதுக்குழுவில் கடுமையாக சாடியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். பா.ஜனதா இதற்கு வெகுவிரைவில் பாடம் புகட்டும்.



    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். #BJP #HRaja
    தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளும் ஊழல் பேர்வழிகள் என்று நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் மக்கள் நீதிமய்யம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான ஸ்ரீபிரியா, பாடலாசிரியர் சினேகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு நடிகை ஸ்ரீபிரியா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசியலுக்கு யார் வேண்டுமானலும் வரலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. மக்கள் யாரை நம்புகின்றனர் என்பதுதான் முக்கியம்.

    தமிழகம் இனியாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக திராவிட கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தந்தனர். தற்போது திராவிட கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

    தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சி அமைய வேண்டும். எனவே வாக்குகளை தயவு செய்து விற்க வேண்டாம். தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளும் ஊழல் பேர்வழிகள்தான். கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கைக்கும், வெற்றிக்கும் தொடர்பு இல்லை. அதிக உறுப்பினர்களை வைத்துள்ள கட்சிகூட பல சமயங்களில் டெபாசிட் இழந்து வருகிறது.

    ரஜினி இன்னும் அரசியலுக்கே வரவில்லை. அவர் வந்தபிறகுதான் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும். அவர் எனக்கு நல்ல நண்பர். இருந்தபோதும் நட்பு வேறு, கொள்கை வேறு.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×