search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi struggle"

    டெல்லியில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டம் வெற்றி பெற கவர்னர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #GovernorKiranbedi

    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கால்நடைத்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் நிருபர்களிடம் கவர்னர் கிரண்பேடி கூறியதாவது:-

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே நியாய விலைக்கடைகள் மூலம் இலவச பொருட்கள் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. இதன்படியே, பொங்கல் இலவச பொருட்களும் வழங்க முடியும். அதனடிப்படையில் கோப்புகளை அனுப்பினால் மட்டுமே ஒப்புதல் வழங்க முடியும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார்.

    அவரிடம் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற உள்ளதே? என கேட்டதற்கு என்னை திரும்ப பெறக் கோரி டெல்லியில் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    அவர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு வரட்டும். இன்று என்ன நடக்கிறது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும், நாளை நடப்பதை யாராலும் கணிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #GovernorKiranbedi

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி டெல்லியில் பசுமை பட்டாசு விற்பது எப்படி? என கேள்வி எழுப்பும் வியாபாரிகள் காய்கறிகளுக்குள் வெடிகளை திணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். #firecrackers #greenvegetables
    புதுடெல்லி:

    தீபாவளியின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று சமீபத்தில் அறிவுறுத்திய சுப்ரீம் கோர்ட், அதிகப்படியான சத்தம் மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

    குறைவாக மாசுபடுத்தும் மேம்படுத்தப்பட்ட நவீன வகை பட்டாசுகளை (பசுமை பட்டாசு) மட்டுமே இனிமேல் தயாரிக்க வேண்டும், விற்பனை செய்ய வேண்டும்.

    குறிப்பாக, காற்றுமாசு அதிகமுள்ள டெல்லி பகுதியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் மீறப்பட்டால், அந்த இடத்தின் காவல் நிலைய அதிகாரி பொறுப்பாக்கப்படுவார், பிறகு அவர்மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதி ஏ.கே சிக்ரி மற்றும் நீதிபதி அஷோக் பூஷண் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு தீர்ப்பளித்தது.

    இதனால் பாதிக்கப்பட்ட டெல்லி பட்டாசு விற்பனையாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். பசுமை பட்டாசு என்ற ஒன்று தயாரிக்கப்படாத நிலையில், அதை எங்கிருந்து கொள்முதல் செய்து மக்களிடம் விற்பனை செய்வது என அவர்கள் ஆத்திரத்துடனும், வேதனையுடனும் கேள்வி எழுப்புகின்றனர்.

    இந்நிலையில், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சுரைக்காய், முட்டை கோஸ், பாகற்காய், முள்ளங்கி, குடை மிளகாய், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளுக்குள் அதன் அளவுக்கேற்ப வெடிகளை திணித்து, ‘இதையா பசுமை பட்டாசு என்று விற்பது?’ என டெல்லியில் உள்ள சடார் பஜார் பட்டாசு வியாபாரிகள் சங்கத்தினர்  இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    இப்படிப்பட்ட உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு ஓராண்டு முன்னதாகவே பசுமை பட்டாசுகளை தயாரித்து இருப்பில் வைத்திருக்க வேண்டுமல்லவா? எனவும் அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். #firecrackers #greenvegetables #greenvegetablesfirecrackers #newinnovation #greencrackers 
    ×