search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Decorating"

    • உத்திராபதிஸ்வருக்கு பால், தயிர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • மாலை உத்திராபதிஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை உத்திராபதியார் கோவில் தெருவில் உத்திராபதிஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமுதுபடையில் பெருவிழா நேற்று நடைபெற்றது.

    அதில் அனைத்து வகையான பழங்கள், இனிப்புகள் , காய்கறி வகைகள் கொண்டு சமையல் செய்து அன்னம் படைக்கப்பட்டது.

    முன்னதாக பக்தர்கள் விநாயகர் கோவிலில் இருந்து பால் காவடி எடுத்து உத்திராபதிஸ்வரர் கோவில் வந்தடைந்தனர்.

    பின்னர் உத்திராபதிஸ்வருக்கு பால், தயிர், திரவிய பொடி, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அன்னதானம் நிகழ்ச்சியின் போது சிவன் பார்வதி சிறு தொண்டர் வெங்கட்நங்கை சந்தன நங்கை சீராளன் முருகன் போன்ற புராண கதைகளின் வேடங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது.

    பின்பு மாலை உத்திராபதிஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இரவு சுவாமி வீதியுள்ள காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் துரைராஜன் , சிவா, பிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வண்ண மலர்களை ஊர்வலமாக மேல தாளங்கள் முழங்க கோவிலுக்கு எடுத்து சென்றனர்.
    • சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தர குஜலாம்பிகை உடனுறைஅட்சயலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பங்குனித்திருவிழா பூச்சொரிதல் விழா தொடங்கியது முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலாவாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வண்ணம் பலவிதமான வண்ண மலர்களை ஊர்வலமாக ஆலய உட்பிரகாரத்தை மேல தாளங்கள் முழங்க எடுத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து பலிபீடம் மற்றும் உற்சவருக்கு மஞ்சள் பொடி பால் பன்னீர் இளநீர் தேன் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம்வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது.

    • பன்னீர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு.
    • செல்வ முருகன் சாமி வீதி உலா நடைபெற்றது.

    திருவோணம்:

    திருவோணத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நேற்று திருவோணம் சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செல்வ முருகனுக்கு பால்குடம் காவடிகள் எடுத்தனர் பிறகு செல்வ முருகனுக்கு பாலாபிஷேகம் பன்னீர் அபிஷேகம் இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் அனுபவிக்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,

    பிறகு திருவோணம் கடைவீதி முழுவதிலும் ஸ்ரீ செல்வ முருகன் சாமி வீதி உலாநடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வல்லநாட்டு நகரத்தார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×