search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Street Walking"

    • இதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வருகிறது.
    • நிகழ்ச்சியான ரோகிணி தீபம் ஏற்று விழா நாளை ( 27 -ந்தேதி நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருமாணிக்குழியில் பிரசித்தி பெற்ற வாமனபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 18- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . இதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வருகிறது. மேலும் காலையில் சந்திர சேகர் சாமி வீதியுலா, மாலையில் பஞ்சமூர்த்தி வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முக்கிய விழாவான கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வாமன புரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி காலையில் வாமனபுரீஸ்வரர் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக வந்து தேரில் எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க மங்கள வாத்தியத்துடன் சாமிக்கு சிறப்பு தீபாரதனை காண்பித்து தேர்த்திருவிழா நடைபெற்றது.

    அப்போது திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து முக்கிய மாடவீதியில் உலா வந்து மீண்டும் தேர் நிலை அடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று மாலை பஞ்சமூர்த்தி வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. கார்த்திகை மாதம் பிரம்ம உற்சவ விழாவில் சிகர நிகழ்ச்சியான ரோகிணி தீபம் ஏற்று விழா நாளை ( 27 -ந்தேதி )நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற உள்ளது. பின்னர் நடராஜர் தேரடி பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கோவில் எதிர்புறத்தில் உள்ள மலை மீது சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்று பக்தி முழக்கத்துடன் ரோகிணி தீபம் ஏற்றப்படும் . இதில் ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் கலந்து கொண்டு ரோகிணி தீபத்தை சுற்றி வந்து வழிபடுவார்கள். 29 -ந் தேதி பிரம்ம உற்சவ விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பன்னீர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு.
    • செல்வ முருகன் சாமி வீதி உலா நடைபெற்றது.

    திருவோணம்:

    திருவோணத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நேற்று திருவோணம் சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செல்வ முருகனுக்கு பால்குடம் காவடிகள் எடுத்தனர் பிறகு செல்வ முருகனுக்கு பாலாபிஷேகம் பன்னீர் அபிஷேகம் இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் அனுபவிக்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,

    பிறகு திருவோணம் கடைவீதி முழுவதிலும் ஸ்ரீ செல்வ முருகன் சாமி வீதி உலாநடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வல்லநாட்டு நகரத்தார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×