search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Customs officials raid"

    • கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சுரங்கத் துறை அதிகாரிகள் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கல் குவாரி முறைகேடுகளுக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக திருமயம் பகுதியைச் சேர்ந்த கல் குவாரி அதிபர் ராசு, அவரது மகன் தினேஷ் லாரி உரிமையாளர் முருகானந்தம் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த கொலைக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட இன்னொரு கல்குவாரி உரிமையாளர் ராமையாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே சமூக ஆர்வலர் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட ராசு மற்றும் ராமையா ஆகிய இருவரது கல் குவாரிகளிலும் இன்று புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த குவாரிகள் திருமயம் அருகே துளையானூரில் இருவரது குவாரிகளும் அடுத்தடுத்து உள்ளது. இந்த சோதனை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் புதுக்கோட்டை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் லலிதா, திருச்சி சுரங்கத்துறை உதவி இயக்குனர் சத்தியசீலன், கரூர் உதவி இயக்குனர் சங்கர் மற்றும் பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் அரசு அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கல் மற்றும் கனிம வளம் முறைகேடு நடந்துள்ளதா என ஆய்வு நடத்துகிறார்கள். இந்த சம்பவம் கல் குவாரி அதிபர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    பென்னாகரத்தில் அ.தி.மு.க மாநில விவசாய அணி தலைவர் வீட்டில் இன்று சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #ADMK
    தருமபுரி:

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பால்வளத்துறை தலைவரும், அ.தி.மு.க மாநில விவசாய அணி தலைவருமான டி.ஆர். அன்பழகன். இவர் பென்னாகரம் அடுத்துள்ள தாளப்பள்ளம் என்ற கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே அலுவலகம் உள்ளது.

    மேலும் அவர் அரசு காண்டிராக்ட் வேலைகளை எடுத்து நடத்தி வருகிறார். அதற்கு அவர் அரசுக்கு சேவை வரி கட்ட வேண்டும். ஆனால் வரியை கட்டாமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் திருச்சி சுங்கவரித்துறை அதிகாரி ரவிந்திரநாத் தலைமையில் இன்று 8 மணி அளவில் பென்னாகரம் தாளப்பள்ளம் டி.ஆர்.அன்பழகன் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது அவரிடம் அரசு காண்டிராக்ட் எடுத்து நடத்துவதால் அதற்கான வரியை கட்டவில்லை என்றனர். அதற்கு அவர் அரசு கட்ட வேண்டிய சேவைவரியை நான் சரியாக தான் கட்டி வருகிறோம்.

    அதற்கான ரசீதை எடுத்து அதிகாரியிடம் கொடுத்தார். அவர்கள் அந்த ரசீதை வாங்கி கொண்டு நாங்கள் சரி பார்த்து விட்டு தருகிறோம் என்றனர். இந்த சோதனை தொடர்ந்து 4 மணி நேரம் நடந்தது.

    சுங்கவரித்துறையில் இருந்து எங்கள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதற்கான பதிலை நாங்கள் ஓசூர் அலுவலகத்திற்கு முறையாக அனுப்பி வைத்து விட்டோம். ஆனால் திருச்சி அலுவலகத்திற்கு இன்னும் வரவில்லை என அதிகாரிகள் கேட்டனர். அந்த நோட்டீஸ்க்கான பதிலை நான் அதிகாரியிடம் கூறினேன். பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். #ADMK
    ×