search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSGvKK"

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ். #TNPL2018 #CSGvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 16-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிராக கோவை கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி கோவை கிங்ஸ் அணியின் ஷாருக் கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அபிநவ் முகுந்த் 35 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். ஷாருக் கான் 45 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    அந்தோணி தாஸ் 21 பந்தில் 28 ரன்கள் சேர்க்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில்  பி அருண், ஹரிஸ் குமார் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சேஸிங் செய்து வருகிறது.
    வீரர்கள் தங்களது திறமையை முழுவதும் வெளிப்படுத்தி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் முருகன் அஸ்வின் தெரிவித்துள்ளார். #CSGvKK #TNPL2018
    சென்னை:

    டி.என்.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி காரைக்குடி காளையிடம் தோற்றது.

    சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது.

    கேப்டன் அனிருதா 28 பந்தில் 56 ரன்னும் (4 பவுண் டரி, 4 சிக்சர்), ஷாஜகான் 20 பந்தில் 43 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), பாப்னா 23 பந்தில் 31 ரன்னும் (2 பவுண்டரி) எடுத்தனர்.

    அருண், ஹரீஷ் குமார் தலா 2 விக்கெட்டும், அலெக்சாண்டர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் காரைக்குடி காளை அணி 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் கோபிநாத் அதிகபட்சமாக 38 பந்தில் 47 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), முருகன் அஸ்வின் 24 பந்தில் 33 ரன்னும் (2 சிக்சர்) எடுத்தனர். யோமகேஷ், மோகன் பிரசாத், ராஜ்குமார், லட்சுமணன், பாப்னா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற 3-வது தோல்வியாகும். திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகளிடம் ஏற்கனவே தோற்று இருந்தது. இந்த தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் முருகன் அஸ்வின் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்குடி காளை அணியின் கேப்டன் அனிருதா ஸ்ரீகாந்த் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடினார். இதனால் அவரை ‘பவர் பிளேயில்’ கட்டுப்படுத்த வேண்டும் என்று கருதினோம். அவர் மித வேகப்பந்து வீச்சில் நன்றாக ஆடுவார் என்பதால் தொடக்கத்திலேயே சுழற் பந்து வீரர்கள் பந்து வீசினோம். ஆனால் இந்த திட்டம் எடுபடவில்லை.

    அணியில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. ஒருவேளை எங்கள் திறமையை முழுமையாக வெளிக்காட்டி இருந்தால் ஆட்டத்தின் போக்கை நிச்சயம் மாற்றி இருப்போம்.

    எங்களது பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. பந்து வீச்சு நேர்த்தியுடன் இல்லை.

    தொடர் தோல்விகளில் இருந்து முழுமையாக மீண்டு அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முழு முயற்சி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது ஆட்டத்தில் கோவை கிங்சை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) நெல்லையில் நடக்கிறது.

    காரைக்குடி காளை அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி 4-வது ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 27-ந்தேதி எதிர் கொள்கிறது.

    இன்று 2 ஆட்டங்கள் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. மதுரை 2-வது வெற்றிக்காக பெற காத்திருக்கிறது. தூத்துக்குடி ஹாட்ரிக்‘ வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன. காஞ்சி வீரன்ஸ் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. திண்டுக்கல் அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.#CSGvKK #TNPL2018
    சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது காரைக்குடி காளை #CSGvKK #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 10-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற காரைக்குடி காளை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வி. ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆதித்யா நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த, அனிருதா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆதித்யா 19 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனிருதா 28 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சருடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த மான் பஃவ்னா அதிரடியாக விளையாடி 23 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். 6-வது வீரரான களம் இறங்கிய ஷாஜகான் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 20 பந்தில் 43 ரன்கள் விளாச காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.



    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சேஸிங் செய்து வருகிறது. #PattaiyaKelappu
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் காரைக்குடி காளை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #CSGvKK #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 10-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் காரைக்குடி காளை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்து 7-வது இடத்தில் உள்ளது. காரைக்குடி காளை ஒரு வெற்றி, ஒரு தோல்வி மூலம் 4-வது இடத்தில் உள்ளது.
    ×