search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cows auction"

    • இனிவரும் காலங்களில் அரசு எந்த மேய்ச்சல் நிலங்களையும் கையகப்படுத்தக்கூடாது.
    • 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி நெல்லை டவுனில் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

    நெல்லை:

    நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தயாசங்கர் இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேய்ச்சல் நிலங்கள்

    நெல்லை மாநகராட்சி பகுதியில் இருந்த மேய்ச்சல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அரசின் பல்வேறு திட்டங்களுக்கும், குடியி ருப்பு பகுதிகளுக்காகவும் மாற்றப்பட்டுள்ளது.

    இதனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் உள்ளது. ஆடு, மாடு வளர்ப்பவர்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால் ஆடு, மாடுகள் சாலைகளில் சுற்றி திரிகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

    இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடித்து சென்று தற்போது ஏலம் விட்டு வருகிறார்கள். இனிவரும் காலங்களில் அரசு எந்த மேய்ச்சல் நிலங்களையும் கையகப்படுத்தக்கூடாது.

    கையகப்படுத்தி பயன்படுத்தப்படாமல் இருக்கும் மேய்ச்சல் நிலங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அதுவரை மாடுகளை பிடித்து அபராதம் விதிப்பதையும், ஏலம் விடுவதையும கைவிட வேண்டும்.

    இதனை வலியுறுத்தி டிசம்பர் 13-ந் தேதி வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காக மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதனை தமிழக அரசு அமல்படுத்தாமல் உள்ளது. மேலும் இதனை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்தும், 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரியும், நெல்லை டவுனில் பா.ஜ.க. சார்பில் டிசம்பர் 24-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

    கங்கைகொண்டான் சிப்-காட்டில் நெல்லை மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரி கங்கைகொண்டானில் டிசம்பர் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகர பகுதி சாலைகளில் மாடுகள் சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததது
    • மாடுகளை பிடித்து மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி அருகே உள்ள வாட்டர்டேங்க் பகுதிக்கு கொண்டு வந்து கட்டி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.

    அதிரடி உத்தரவு

    இதனால் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து அவற்றை ஏலம் விடுமாறு மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    நேற்று மேலப்பாளையம் மண்டலத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு அவை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வைத்து ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் வசூல் கிடைத்தது.

    2-வது நாள்

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக பாளை மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மண்டல உதவி கமிஷனர் ஜகாங்கீர் பாஷா மேற்பார்வையில் மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி அருகே உள்ள வாட்டர்டேங்க் பகுதிக்கு கொண்டு வந்து கட்டி வைத்தனர்.

    தொடர்ந்து அந்த மாடுகளை ஏலம் விடப்படுவதாக அறிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் அங்கு வந்து முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உதவி கமிஷனரிடம் மாட்டின் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாடுகள் தெருக்களில் தான் சுற்றிதிரிந்தது. சாலைகளில் நாங்கள் விடவில்லை. மேலும் நீங்கள் பிடித்து வந்திருப்பது அனைத்தும் பசுமாடுகள். எனவே அவைகளை ஏலம் விடாமல் அபராதத்தொகை மட்டும் விதித்து எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கூறினர்.

    ஆனாலும் ஏற்கனவே உத்தரவிட்டபடி ஏலம் தொடர்ந்து நடைபெற்றது. இதனையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

    ×