search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி பாளை மண்டலத்தில் பிடிக்கப்பட்ட மாடுகள் ஏலம் - உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
    X

    மாடுகள் பிடித்து செல்லப்பட்டதை கண்டித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள்.

    மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி பாளை மண்டலத்தில் பிடிக்கப்பட்ட மாடுகள் ஏலம் - உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

    • மாநகர பகுதி சாலைகளில் மாடுகள் சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததது
    • மாடுகளை பிடித்து மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி அருகே உள்ள வாட்டர்டேங்க் பகுதிக்கு கொண்டு வந்து கட்டி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.

    அதிரடி உத்தரவு

    இதனால் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து அவற்றை ஏலம் விடுமாறு மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    நேற்று மேலப்பாளையம் மண்டலத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு அவை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வைத்து ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் வசூல் கிடைத்தது.

    2-வது நாள்

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக பாளை மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மண்டல உதவி கமிஷனர் ஜகாங்கீர் பாஷா மேற்பார்வையில் மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி அருகே உள்ள வாட்டர்டேங்க் பகுதிக்கு கொண்டு வந்து கட்டி வைத்தனர்.

    தொடர்ந்து அந்த மாடுகளை ஏலம் விடப்படுவதாக அறிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் அங்கு வந்து முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உதவி கமிஷனரிடம் மாட்டின் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாடுகள் தெருக்களில் தான் சுற்றிதிரிந்தது. சாலைகளில் நாங்கள் விடவில்லை. மேலும் நீங்கள் பிடித்து வந்திருப்பது அனைத்தும் பசுமாடுகள். எனவே அவைகளை ஏலம் விடாமல் அபராதத்தொகை மட்டும் விதித்து எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கூறினர்.

    ஆனாலும் ஏற்கனவே உத்தரவிட்டபடி ஏலம் தொடர்ந்து நடைபெற்றது. இதனையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×