search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corrections"

    • உரிய அனுமதியின்றி மரங்கள் மற்றும் வன எல்கையையும் அதன் ஒட்டியுள்ள பகுதியையும் திருத்தம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது.
    • புலிகள் காப்பக எல்கை பகுதியிலும் மற்றும் எல்கை கோட்டிலும் திருத்தம் செய்வது, வன எல்லையை சேதப்படுத்துவது போன்ற செயல்களை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.


    கடையம்:

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் கடையம் வனச்சரக எல்கைக்கு உட்பட்ட மத்தளம்பாறை ஒட்டியுள்ள பகுதியில் தனிக்குழுவாக கடையம் வனச்சரக பயிற்சி உதவி வனப்பாதுகாவலர் ராதை தலைமையில் அதிகாரிகள் ரோந்து சென்றனர்.

    அப்போது வன எல்கையையும், அதனை ஒட்டியுள்ள பகுதியையும் திருத்தம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது. இது சம்பந்தமாக துரித நடவடிக்கை மேற்கொண்டு நில மேற்பார்வையாளர் வெளியப்பன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் வனத்துறையினரிடம் உரிய அனுமதியின்றி மரங்கள் மற்றும் வன எல்கையையும் அதன் ஒட்டியுள்ள பகுதியையும் திருத்தம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது.

    இதைத்தொடர்ந்து துணை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்து ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது .மேலும் புலிகள் காப்பக எல்கை பகுதியிலும் மற்றும் எல்கை கோட்டிலும் திருத்தம் செய்வது, வன எல்லையை சேதப்படுத்துவது, வன உயிரினங்கள் வாழ்விடம் மற்றும் வழித்தடங்களுக்கு இடையூறு விளைவிப்பது போன்ற செயல்களை செய்வோர் மீது வன உயிரின வனச்சட்டம் படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனம் மற்றும் வன உயிரினங்கள் சம்பந்தமாக குற்றங்களுக்கு தகவல் தெரிவிக்க 04634- 295430 இந்த எண்ணிற்கு அழைக்கவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்காக இதுவரை 8.25 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். #SatyabrataSahoo #VoterList
    சென்னை:

    தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அக்டோபர் இறுதி வரை நடைபெறும்.

    இதற்காக கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி போன்றவற்றை திருத்துவதற்காக வாக்காளர்களுக்காக தமிழகம் முழுவதும் 23-ந் தேதியன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 1.1.2019 அன்று 18 வயதை பூர்த்தி செய்யக்கூடிய நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இந்த முகாமில் விண்ணப்பித்தனர்.



    அந்த வகையில் தமிழகம் முழுவதும் நேற்று நடந்த இந்த முகாம்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 937 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 9-ந் தேதி நடந்த சிறப்பு முகாமில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 233 விண்ணப்பங்கள் வந்தன. அந்த வகையில் சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 7 லட்சத்து 59 ஆயிரத்து 970 விண்ணப்பங்கள் தாக்கல் ஆகியுள்ளன.

    கடந்த 9 மற்றும் 23-ந் தேதிகளில் நடந்த முகாம்கள் மற்றும் கடந்த 1-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 260 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    அவற்றில் பெயர் சேர்ப்பதற்கு மட்டும் 6 லட்சத்து 31 ஆயிரத்து 127 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 59,882 விண்ணப்பங்கள், நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சம் 4,278 விண்ணப்பங்கள் தாக்கல் ஆகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 41,363, காஞ்சீபுரம் மாவட்டத்தில் 54,322 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்தத் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.  #SatyabrataSahoo #VoterList
    ×