search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே வன எல்கையில் திருத்தம் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
    X

    கடையம் அருகே வன எல்கையில் திருத்தம் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

    • உரிய அனுமதியின்றி மரங்கள் மற்றும் வன எல்கையையும் அதன் ஒட்டியுள்ள பகுதியையும் திருத்தம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது.
    • புலிகள் காப்பக எல்கை பகுதியிலும் மற்றும் எல்கை கோட்டிலும் திருத்தம் செய்வது, வன எல்லையை சேதப்படுத்துவது போன்ற செயல்களை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.


    கடையம்:

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் கடையம் வனச்சரக எல்கைக்கு உட்பட்ட மத்தளம்பாறை ஒட்டியுள்ள பகுதியில் தனிக்குழுவாக கடையம் வனச்சரக பயிற்சி உதவி வனப்பாதுகாவலர் ராதை தலைமையில் அதிகாரிகள் ரோந்து சென்றனர்.

    அப்போது வன எல்கையையும், அதனை ஒட்டியுள்ள பகுதியையும் திருத்தம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது. இது சம்பந்தமாக துரித நடவடிக்கை மேற்கொண்டு நில மேற்பார்வையாளர் வெளியப்பன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் வனத்துறையினரிடம் உரிய அனுமதியின்றி மரங்கள் மற்றும் வன எல்கையையும் அதன் ஒட்டியுள்ள பகுதியையும் திருத்தம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது.

    இதைத்தொடர்ந்து துணை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்து ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது .மேலும் புலிகள் காப்பக எல்கை பகுதியிலும் மற்றும் எல்கை கோட்டிலும் திருத்தம் செய்வது, வன எல்லையை சேதப்படுத்துவது, வன உயிரினங்கள் வாழ்விடம் மற்றும் வழித்தடங்களுக்கு இடையூறு விளைவிப்பது போன்ற செயல்களை செய்வோர் மீது வன உயிரின வனச்சட்டம் படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனம் மற்றும் வன உயிரினங்கள் சம்பந்தமாக குற்றங்களுக்கு தகவல் தெரிவிக்க 04634- 295430 இந்த எண்ணிற்கு அழைக்கவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×