search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coir"

    • தென்னை நார் தொழில் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
    • வங்கிகளில் என்.பி.ஏ., வகை கடன் தவணை செலுத்தும் நாளை 90ல் இருந்து 180 நாட்களாக உயர்த்த வேண்டும்.

    கோவை,

    மத்திய தொழில்துறை அமைச்சர் பியுஷ்கோயல் தலைமையிலான ஆய்வுக் கூட்டம், புதுடெல்லியில் நடந்தது. இதில் தேங்காய் விலை வீழ்ச்சி, கொப்பரையை ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வது, நலிவடைந்து வரும் தென்னை நார் தொழில் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.ஆய்வுக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி, சந்திரகேகர் எம்.பி, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல், செயலாளர் செல்லத்துரை, நிர்வாகிகள் காந்தி, நாகராஜன், தாஜுதீன், முகமது நூருல்லா, சண்முகசுந்தரம், பத்மநாபன் ஆகியோர் மத்திய அமைச்சரிடம் அளித்து உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா ஊரடங்கு, ரஷ்யா- உக்ரைன் போர், பண மதிப்பு மற்றும் பொருளா தார நிலையி ன்மை, மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி பொருட்க ளின் விலை குறைவு போன்ற காரணங்க ளால் தென்னை சார் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் எண்ணற்றோர் கயிறு கம்பெனிகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். வங்கிகளுக்கும் தவணை தொகை செலுத்த முடிவதில்லை. எனவே வங்கிகளில் என்.பி.ஏ., வகை கடன் தவணை செலுத்தும் நாளை 90ல் இருந்து 180 நாட்களாக உயர்த்த வேண்டும்.மேலும் அனுபவம் மிகுந்த ஐ.ஏ. எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதி தொழிலை மறுசீர மைப்பதுடன், அன்னிய செலவா ணி யை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதில் தென்னை நார் கழிவு முக்கிய பங்கு வகிக்கிறது.
    • சுற்றுச்சூழலில் நிலைத்திருக்கும் செயற்கை பொருட்கள் போன்று இல்லாமல் தென்னை நார் இயற்கையானது.

    உடுமலை :

    இயற்கையை பாதுகாப்பதில் தென்னை நார் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என கயிறு வாரிய தலைவர் குப்புராமு தெரிவித்தார். இது குறித்து கயிறு வாரிய தலைவர் குப்புராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னை நார் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பல்துறை பயன்பாடுகளுடன் கைகொடுக்கிறது. பல ஆண்டுகளாக சுற்றுச்சூழலில் நிலைத்திருக்கும் செயற்கை பொருட்கள் போன்று இல்லாமல் தென்னை நார் இயற்கையானது.நீடித்த விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதில் தென்னை நார் கழிவு முக்கிய பங்கு வகிக்கிறது. தென்னை நார் கழிவு ஈரப்பதத்தை தக்க வைத்து காற்றோட்ட பண்புகளை வழங்குகிறது. ஆரோக்கியமான தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

    மண்ணில் ஈரப்பதம், ஊட்டசத்தை தக்க வைக்கவும், திறன் மேம்படுத்தவும் தென்னை நார் கழிவை கரிம திருத்தமாக சேர்க்கலாம். இது தாவரங்களில் சிறந்த காற்றோட்டம் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.தோட்டக்கலையில் பிளாஸ்டிக் பூந்தொட்டிகளு க்கு மாற்றாக தென்னை நார் பூந்தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. மண் அரிமானம், மண் சரிவுகளை கட்டுப்படுத்த தென்னை நார் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் பயன்படுத்த ப்படுகின்றன. தென்னை நார் பொருட்களை பயன்படுத்து வதால் சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் கழிவுகளின் அளவை குறைக்க முடியும்.இதன் உற்பத்தி குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தை கொண்டுள்ளது. தென்னை நார்களை பிரித்தெடுப்பதில் மிக குறைந்தபட்ச ரசாயன சிகிச்சைகள் மட்டுமே உள்ளது.கழிவு என கருதி ஒதுக்கிய இந்த பொருட்களை கயிறு வாரியம் ஆராய்ச்சி வாயிலாக செல்வமாகவும், அனைத்து சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு மாற்றாகவும் மாற்றியதன் வாயிலாக குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×