search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Post"

    • 2005ல் முதல்முறையாக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார்
    • இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் என்பது குறிப்பிடத்தக்கது

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர், தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகரிடம் சமர்ப்பித்தார். புது அரசு உருவாகும் வரை நிதிஷ் காபந்து முதல்வராக நீடிப்பார்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி அமைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அரசியல் பயணத்தில் அதிக யு-டர்ன் அடித்த தலைவர்

    2000ல் முதல் முறையாக முதல்வரான நிதிஷ், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 7 நாட்களில் பதவியை துறந்தார்.

    2005ல் பா.ஜ.க.வுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றார்.


    2013ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நரேந்திர மோடியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிய கூட்டணியில் முடிவு எடுக்கப்பட்டது. இதை தீவிரமாக எதிர்த்த நிதிஷ், சுமார் 17-வருட கால கூட்டணியை முறித்தார்.


    தொடர்ந்து 2014 மக்களவை தேர்தலில் தனிக்கட்சியாக போட்டியிட்டார். ஆனால், நிதிஷ் குமாரால் 2 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதையடுத்து, கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அக்கட்சியின் ஜிதேன் ராம் மஞ்சி முதல்வரானார்.

    2015 பீஹார் சட்டசபை தேர்தலில், தனது அரசியல் எதிரியான லல்லு பிரசாத் யாதவின் ஆதரவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

    ஆனாலும், 2016ல் பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜிஎஸ்டி செயலாக்கத்தையும் லல்லு உட்பட பலர் எதிர்த்தாலும், நிதிஷ் ஆதரித்தார்.


    2017ல் லல்லுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல்வர் பதவியை மீண்டும் ராஜினாமா செய்தார். ஆனால், உடனடியாக தேசிய ஜனநாயக கூட்டணி உதவியுடன் மீண்டும் முதல்வரானார்.

    2020ல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார்.

    2022 ஆகஸ்ட் மாதம், பா.ஜ.க.விற்கு மாநிலத்தில் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து கூட்டணியை மீண்டும் உடைத்தார்.

    ஆனால் அடுத்த நாள், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெல்வதையும், பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் ஆவதையும் தடுக்க மோடி எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டு, கடந்த வருடம், காங்கிரஸ் தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளின் ஒத்துழைப்புடன் "இந்தியா கூட்டணி" எனும் பெரும் கூட்டணி உருவானது.

    அந்த கூட்டணியில் மம்தா, கெஜ்ரிவால் போன்ற தலைவர்களை போல் முக்கிய உறுப்பினராக இருந்தவர் நிதிஷ் குமார்.


    இந்நிலையில், தற்போது நிதிஷ் மீண்டும் முதல்வர் பதவியை துறந்து விட்டார்.

    மீண்டும் தான் எதிர்த்த பா.ஜ.க.வுடன் இணைந்து அக்கட்சி பிரமுகர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி, நிதிஷ் முதல்வராக முயல்வதாக வெளியாகி உள்ள தகவல்களால் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    அரசியல் வாழ்க்கையில் தான் எதிர்த்தவர்களிடமே ஆதரவு கோரி முதல்வர் பதவியில் தொடர்வது நிதிஷ் குமாருக்கு கை வந்த கலை என சமூக வலைதளங்களில் பயனர்கள் விமர்சிக்கின்றனர்.

    முதல்-மந்திரி பதவி மீது ஆசை இல்லை என சொல்வதற்கு நான் சன்னியாசி அல்ல என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    முதல்-மந்திரி பதவி மீது ஆசை இல்லை என்று சொல்வதற்கு நான் சன்னியாசி அல்ல. எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன். அதன் முடிவை இறைவன் பார்த்துக்கொள்வார். கடந்த ஆண்டு என்னுடைய பிறந்தநாளன்று சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது.

    இந்த ஆண்டு எனது நண்பரின் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஆதரவாளர்கள் யாரும் என்னை தேடி வர வேண்டாம். நாளை (அதாவது இன்று) நான் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட முடிவு செய்துள்ளேன்.



    பா.ஜனதாவினர் என்னை இலக்காக வைத்து செயல்படுகிறார்கள். அவர்கள் தங்களின் வேலையை செய்கிறார்கள். இதை தவறு என்று நான் சொல்லமாட்டேன். மாங்காய் பழமானால் மட்டுமே, அதை கல்லால் அடித்து விழவைக்க முடியும்.

    சித்தராமையா பற்றி எச்.விஸ்வநாத் கூறிய கருத்தால், கூட்டணியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. ராகுல் காந்தியின் வழிகாட்டுதல்படி நானும், சித்தராமையாவும் செயல்படுகிறோம். மீண்டும் முதல்-மந்திரியாவேன் என்று எடியூரப்பா சொல்கிறார். அதுபோல் ஒன்றும் நடைபெறாது.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
    நிச்சயமாக எனக்கு தமிழக முதல்-அமைச்சராகும் எண்ணம் இல்லை டெல்லி அரசியலே போதும் என்று தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார். #Kanimozhi #DMK
    சென்னை:

    தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம், ‘உங்களுக்கு முதல்-அமைச்சராகும் எண்ணம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நிச்சயமாக எனக்கு முதல்-அமைச்சராகும் எண்ணம் இல்லை. டெல்லி அரசியல் எனக்கு பழக்கமான ஒன்று. எனவே பழகிய ஒரு இடத்திலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

    தி.மு.க.வில் பெண் உறுப்பினர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? என்று அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, நிச்சயமாக, மாவட்ட செயலாளர்கள் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள். எனவே பெண்கள் இன்னும் அதிகமாக அரசியலில் பங்கெடுத்து கொள்ள வேண்டும். முக்கிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பதே இன்றைய முக்கியமான தேவை ஆகும்.’ என கனிமொழி எம்.பி. பதில் அளித்தார்.  #Kanimozhi #DMK
    ×