search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Padmavathi Thayar Temple"

    • கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 41 நாட்கள் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்யலாம்.
    • காலை 7½ மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி.

    சென்னை தியாகராயநகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் கடந்த 17-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தற்போது 41 நாட்கள் மண்டல அபிஷேக பூஜை தொடங்கி நடந்து வருகிறது. பத்மாவதி தாயார் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    புதிதாக கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோவில் என்பதால் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை இடையில் 1½ மணி நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அதன்படி தினமும் காலை 7.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரையிலும், மதியம் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலும், இரவு7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    மண்டல அபிஷேக பூஜை நிறைவடைந்ததும், வேதவிற்பன்னர்கள் 1,000 கலசங்கள் வைத்து கலச பூஜை செய்கின்றனர். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட மூலஸ்தானம் மற்றும் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களில் புனித தீர்த்தம் தெளிக்கப்படுகிறது.

    கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 41 நாட்கள் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்யலாம். அதனை தொடர்ந்து வரும் நாட்களிலும் தரிசனம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக்குழு செய்து உள்ளதாக அதன் தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி தெரிவித்தார்.

    • காலை 11 மணிக்கு பொதுமக்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
    • 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தானமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கிய இடத்தில் பத்மாவதி தாயார் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.10 கோடி மதிப்பில் கட்டி உள்ளது. இந்த கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு கும்பாபிஷேகம் தொடங்கியது.

    திருப்பதி செல்ல முடியாத பக்தர்களுக்காக சென்னை தி.நகரில் ஏற்கனவே ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு கடந்த 12-ந்தேதியில் இருந்து சிறப்பு பூஜைகளும், ஓமங்களும் நடந்து வருகிறது. அந்தவகையில் பத்மாவதி தாயார் சிலை கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று நடந்தது. இந்த கோவிலுக்கு தேவையான சிலைகள், திருப்பதியில் வடிக்கப்பட்ட பத்மாவதி தாயார், துவாரபாலகர்களான வனமாலி, பலாஹினி சிலைகள், மூல விக்ரஹங்கள், கலசங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. மூலவர் பத்மாவதி தாயார் சிலை 3 நாட்கள் நெல் தானியத்திலும், தண்ணீரிலும், 2 ஆயிரம் லிட்டர் பாலிலும் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நேற்று காலையில் 4½ அடி உயரம், 3½ அடி அகலத்திலான பத்மாவதி தாயார் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான சதுஸ்தனா அர்ச்சனா பூஜை, மூர்த்தி ஓமம், நேற்று காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை நடந்தது. காலை 9 மணியில் இருந்து 9.30 மணிக்குள் தாயார் சிலை கருவறைக்கு கொண்டு சென்று அங்கு அஸ்தபந்தன பூஜைகள் செய்யப்பட்டு பத்மாவதி தாயார் பிரதிஷ்டை நடந்தது. பத்மாவதி தாயார் கருவறையில் நிறுவப்பட்டதை தொடர்ந்து திருப்தி கோவிலில் உள்ள ஆகம விதிப்படி அனைத்து சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டன. தொடர்ந்து காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தாயாருக்கு பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன.

    விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. 10 மணி முதல் 11 மணி வரை பத்மாவதி தாயார்-சீனிவாசா திருக்கல்யாணம் நடக்கிறது. 11 மணி முதல் 11.30 மணி வரை ஆச்சர்யா, ரித்விக் பரிச்சார்கா மர்யாடா போன்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, விசாகப்பட்டினம் சாரதா பீடம் ஸ்ரீஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீசுவாத் மனேந்திரா சரஸ்வதி சுவாமிகள், தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், ஆன்மிகவாதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சீனிவாச பெருமாள் கோவிலை கட்டி உள்ளது. ஆனால் நாட்டிலேயே முதன் முறையாக ஆந்திர மாநிலத்தை விட்டு, பிற மாநிலமான தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் பத்மாவதி தாயாருக்கு தனி கோவிலை கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 11 மணிக்கு பொதுமக்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கூட்டத்தை சமாளிக்க இரும்பு தடுப்பு வேலி அமைத்து ஒரு வரிசையில் உள்ளே செல்லவும் மற்றொரு வரிசையில் வெளியே வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • 6 கிரவுண்ட் நிலத்தில் 3 கிரவுண்டில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • ஒரே கல்லில் தாயார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

    திருச்சானூரில் அருள் பாலிக்கும் பத்மாவதி தாயார் கோவிலை போன்று இந்தியாவில் 2-வதாக சென்னை தியாகராய நகரில் ஜி.என்.செட்டி சாலையில் பத்மாவதி தாயார் அருள்பாலிக்கும் கோவிலுக்கு மன்னர் கால முறையில் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது.

    இக்கோவில் மொத்தம் உள்ள 6 கிரவுண்ட் நிலத்தில் 3 கிரவுண்டில் கோவில் கட்டப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலத்தில் மண்டபம், மடப்பள்ளி புஷ்கரணி வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைந்துள்ளது.

    வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலின் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சின்ன புஷ்கரணி குளம் உள்ளது. அந்த குளத்தை பார்த்து மகிழ்ந்து பின்னர் அருகில் உள்ள துவார பாலகேஷி அம்மனை வழிபடலாம்.

    இங்கு 2 அம்மன் சிலைகள் உள்ளன. அங்கு வழிபட்ட பின்னர் கோபுர தரிசனத்தை காணலாம். மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம், பாஞ்சராத்தர ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. இதில் கலை நலயமிக்க சிற்பங்களும் உள்ளன.

    கோபுரத்தை தரிசித்துவிட்டு உள்ளே சென்றதும் கருவறையில் வடக்கு திசை நோக்கி பத்மாவதி தாயார் வீற்றிருக்கும் அழகை காணலாம்.

    இந்த பத்மாவதி தாயார் சிலை, திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் உள்ளது போன்றே பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தாயாரின் காவல் தெய்வங்களான வனமாலி, பலாக்கினி உள்ளனர்.

    ஒரே கல்லில் தாயார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

    தாயார் சிலை 4½ அடி உயரம் 3 அைடி அகலம் கொண்டதாகும். சிலை வடிவமைக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜலவாசம், தானிய வாசம், நம்மூலிகை மற்றும் பாலிபிஷேகம் செய்து கருவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    தினமும் காலை, மதியம், மாலை மூன்று காலை பூஜைகள் நடத்தப்படும். தாயார் கருவறைக்கு பின்புறம், மடப்பள்ளியும், தாயார் அணியக்கூடிய அணிகலன்கள் வைப்பதற்கு தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. தாயார் கோவில் பஞ்சரத்தின ஆகம விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளது

    கருவறை எதிரே பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு திசை நோக்கி அருளும் அம்மனை மனம் குளிர தரிசனம் செய்து விட்டு வெளியே வந்ததும் இடது புறம் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதில் தங்கள் காணிக்கையை செலுத்தலாம்.

    கோவில் வளாகத்தில் ராமானுஜர், விஸ்வசேனா சிலைகளும் இடம் பெற்றுள்ளன. கோவில் கருவறையின் கோபுரம் தங்க நிறத்தில் பிரகாசிக்கிறது. கோவிலின் பின் பகுதியில் மடப்பள்ளி வழியாக வந்து கொடி மரத்தையும் சுற்றி வந்து வழிபடலாம்.

    கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக மூன்று வேளையும் மூன்று விதமான அன்ன பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் தனது மன நிம்மதிக்காக கோவில் வளாகத்தில் அமர்ந்து இறைவனை நினைத்து அமர்ந்து செல்வது வழக்கம். இதற்காகவே அம்மனை தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் வாளகத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கும் இட வசதி உள்ளது.

    முன்புறம் கோவிலை பற்றி தகவல்கள் மற்றும் வசதிகள் பற்றி அறிய தகவல் ைமயம் நிர்வாக அலுவலகம் ஆகியவை உள்ளன.

    பக்தர்களுக்கு கண்காணிப்பு காமிராக்களுடன் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

    • சென்னையில் பத்மாவதி தாயாருக்குத் தனியாக ஒரு கோவில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
    • தாயார் சிலை 4½ அடி உயரம் 3 அைடி அகலம் கொண்டதாகும்.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதியைப் பற்றிக் குறிப்பிடும் போது, `இறை அருள் தானாகவே பூமிக்கு வந்து நிலைபெற்ற இடம்' என்று சொல்வார்கள். அத்தகைய பழைமையும் பெருமையும் உடையது திருமலை திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோவில். இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் தினமும் ஏழுமலையானைத் தரிசிக்கக் குவிந்து வருகின்றனர். எனவே பக்தர்களின் வசதிக்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு சேவைகளைத் தொடர்ந்து செய்துவருகிறது.

    திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு முறையான தகவல்களை அளிக்கவும் தரிசன மற்றும் சேவை சீட்டுகளைப் பெறவும் பல நகரங்களில் தரிசன தகவல் தொடர்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சேவை மையங்கள் உள்ளன.

    அதன் ஒரு பகுதியாக 2019-யில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை அருகில் கட்டப்பட்டுள்ள வேங்கடேசப் பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதற்கு விவேகானந்தா கேந்த்ராலயம் 5 ஏக்கர் நிலம் வழங்கிது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காகக் கோவில் திறந்து வைக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பாகத் திட்டமிடப்பட்டு 22.5 கோடி ரூபாய் செலவில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு, இதன் வடிவம் திருமலை திருப்பதி கோவிலைப் போன்ற அமைப்பில் இருப்பதுதான். எனவே இங்குத் தரிசனம் செய்யும் பக்தர்கள் திருமலையில் தரிசனம் செய்த உணர்வினைப் பெறுவர்.

    தென் இந்தியாவில் வேங்கடாசலபதி என்று அழைக்கப்படும் பெருமாள், வட இந்தியாவில் `பாலாஜி' என்று பக்தியுடன் அழைக்கப்படுகிறார். குருசேத்திரத்தில் 34.6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருப்பதி வேங்கடாசலபதி கோவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் தற்போது தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து மகிழ்கின்றனர் விரைவில் அண்டை மாநிலமான தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரிலும் திருப்பதி கோவில் கட்டப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அசோக் சிங்கால், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆண்டு திட்டமிட்டுள்ள மற்றும் செயல்படுத்தி வரும் திருப்பணிகள் குறித்துப் பேசினார்.

    சென்னையில் பத்மாவதி தாயாருக்குத் தனியாக ஒரு கோவில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. பத்மாவதி தாயாருக்கு ஆலயம் கட்ட நடிகை காஞ்சனா மற்றும் அவரது சகோதரி கிரிஷா பாண்டே 6 கிரவுண்டு நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.

    இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி 2021 பிப்ரவரியில் காஞ்சி காமக்கோடி சங்கராச்சாரியார், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் ஹரி ஜவஹர் ஐ.ஏ.எஸ்., ஏ.ஜே. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆந்திரா அரசின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் தலா ஒரு பசு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 கோவில்களுக்கு பசுவும் கன்றும் வழங்கப்பட்டது.

    2010-ல் நடிகை காஞ்சனா அவரது சகோதரி கிரிஷா பாண்டே 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பத்மாவதி தாயார் கோவில் ரூ.10 கோடி செலவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. தேவஸ்தானம் சார்பில் ரூ.9 கோடியும், ராஜகோபுரம் ரூ.1.10 கோடியில் ஏ.ஜே.சேகர் சொந்த செலவில் கட்டப்பட்டுள்ளது.

    பத்மாவதி தாயார் சிலை திருப்பதி தேவஸ்தானம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான சிற்ப கலைஞர்கள் இந்த பணியை மேற்கொண்டனர். ஒரே கல்லில் தாயார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

    தாயார் சிலை 4½ அடி உயரம் 3 அைடி அகலம் கொண்டதாகும். சிலை வடிவமைக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜலவாசம், தானிய வாசம், நம்மூலிகை மற்றும் பாலிபிஷேகம் செய்து கருவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    தினமும் காலை, மதியம், மாலை மூன்று காலை பூஜைகள் நடத்தப்படும். தாயார் கருவறைக்கு பின்புறம், மடப்பள்ளியும், தாயார் அணியக்கூடிய அணிகலன்கள் வைப்பதற்கு தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. தாயார் கோவில் பஞ்சரத்தின ஆகம விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளது

    என தெரிவித்தார் ஏ.ஜே.சேகர் தலைவர் உள்ளூர் ஆலோசனை குழு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

    • நாளை 17-ந்தேதி காலை 7.30 மணிமுதல் 7.44 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • நாளை பகல் 11 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
    • 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே முதல் முதலாக சென்னையில் தான் பத்மாவதி தாயாருக்கு தனி கோவில் கட்டி நாளை 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிமுதல் 7.44 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

    முன்னதாக 3 நாட்கள் பத்மாவதி தாயார் நெல் தானியத்திலும், தண்ணீரிலும் 2000 லிட்டர் பாலிலும் அபிஷேகம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்று காலையில் தாயாரை கோவில் கருவறைக்கு கொண்டு சென்று அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை சதுஸ்தனா அர்ச்சனா நடந்தது.

    8 மணி முதல் 9 மணி வரை மூர்த்தி ஹோமம் நடத்தப்பட்டது. 9 முதல் 9.30 மணி வரை தாயாருக்கு அஸ்த பந்தன மூல விக்கிரக பிரதிஷ்டை மகாத்சயம் நடந்தது. பத்மாவதி தாயார் கருவறையில் நிறுவப்பட்டதை தொடர்ந்து திருப்தி கோவிலில் உள்ள ஆகம விதிப்படி அனைத்து சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டன. தொடர்ந்து காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தாயாருக்கு பல்வேறு சடங்குகள் செய்யப்படுகின்றன.

    துவஜஸ்தம்ப சாயா, ஜலதிவாசம், பிம்ப நயனோன் மீளனம், தீர்த்தபிரசாத கோஷ்டி, சதுஸ்தானார்ச்சனா, தத்வனயாசம், மூர்த்தி ஹோமம், பூர்ணா ஹுதி, சயனாதிவாசம், தீர்த்தபிரசாத கோஷ்டி போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    நாளை கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை சதுசதனா அர்ச்சனை தாயாருக்கு நடக்கிறது. 5-மணி முதல் 6 மணி வரை மகா சாந்தி ஹோமம் பூர்ணாஹுதி, 6 மணி முதல் 6.30 மணி வரை கும்ப உத்தப்பன 7 மணி முதல் 7.15 மணிவரை ஆலய பிரதக்ஷனா, 7.15 முதல் 7.30 மணி வரை சம்பாத்ஜய சபர்ஷனம், 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் மீன லக்கணத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    விமான கோபுரத்திலும் ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

    10 மணி முதல் 11 மணி வரை பாணி கிரகணம் (பத்மாவதி சீனிவாசா கல்யாணம்) 11 மணி முதல் 11.30 மணி வரை ஆச்சர்யா, ரித்விக் பரிச்சார்கா மர்யாடா நிகழ்ச்சி நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.ஒய்.சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, விசாகப்பட்டினம் சாரதா பீடம் ஸ்ரீ ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சுவாத் மனேந்திரா சரஸ்வதி சுவாமிகள், தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் மற்றும் ஆன்மீகவாதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    நாளை காலையில் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு குறைந்த அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சிவாச்சாரியர்கள், குருக்கள், நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கும்பாபிஷேகத்தை காண அனுமதிக்கப்படுகிறார்கள்.

    11-மணியில் இருந்து பொதுமக்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கூட்டத்தை சமாளிக்க இரும்பு தடுப்பு வேலி அமைத்து ஒரு வரிசையில் உள்ளே செல்லவும் மற்றொரு வரிசையில் வெளியே வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு வரை பத்மாவதி தாயாரை தரிசிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சாதம், இனிப்பு பொங்கல், வெஜ் பிரியாணி ஆகிய உணவு வகைகள் 3 வேளையும் வழங்கப்படுகிறது.

    பக்தர்கள் சாப்பிடுவதற்கு வசதியாக கோவிலுக்கு எதிரே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு டேபிள்-சேர் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இதேபோல நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் அன்னதானம் இடைவிடாமல் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழுத் தலைவர் ஏ.ஜே.சேகர் தெரிவித்தார்.

    பத்மாவதி தாயார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக திருப்பதி லட்டு வழங்கப்படுகிறது. 15 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    நாளை கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் இரவு 7.30 மணிக்கு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தாயார் கோவிலில் இருந்து புறப்பட்டு ஜி.என்.செட்டி ரோடு வலது புறமாக சென்று வடக்கு போக் சாலை, விஜயராகவாச் சாரியார் சாலை, டாக்டர் நாயர் ரோடு வழியாக சென்று மீண்டும் திருமாட வீதியை அடைகிறது.

    கும்பாபிஷேகத்தையொட்டி நாளை காலையில் ஜி.என்.செட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தை மாற்றி விடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. காலையில் இருந்து இரவு வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்தை சீர் செய்ய போலீசாரும் அங்கு குவிக்கப்படுகிறார்கள்.

    ×