search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Carrot Laddu"

    குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேரட், கோவா சேர்த்து வீட்டிலேயே சூப்பரான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 200 கிராம்,
    தேங்காய்த்துருவல் - 1 கப்,
    பொடித்த கோவா - 1/2 கப்,
    சர்க்கரை - 1/2 கப் அல்லது தேவைக்கு,
    மெல்லியதாக சீவிய பாதாம், பிஸ்தா - தேவைக்கு,
    உடைத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தேவைக்கு,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
    அலங்கரிக்க விருப்பமான நட்ஸ் - தேவைக்கு.



    செய்முறை :

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து நெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி சூடானதும் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

    அதே கடாயில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கேரட்டை போட்டு வதக்கவும். ‘

    கேரட் சிறிது வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பொடித்த கோவாவை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் 10 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

    சர்க்கரை கரைந்து அனைத்தும் சுருண்டு கடாயில் ஒட்டாமல் வரும்பொழுது வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை கலந்து இறக்கவும்.

    ஆறியதும் லட்டுகளாக பிடித்து பிஸ்தா, பாதாம் சீவலால் அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான கேரட் கோவா லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×