என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bride torture"

    • மதுரை அருகே ரூ.7 லட்சம், 10 பவுன் நகைகள் கேட்டு புதுப்பெண்ணை சித்ரவதை செய்துள்ளனர்.
    • கடந்த மாதம் 10-ந்தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் செய்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் கற்பகநகரை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் நாகேஸ்வரி(வயது23). இவருக்கும் திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் மகன் உதயசங்கர்(28) என்பவருக்கும் கடந்த 10-6-2022 அன்று திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின் போது வரதட்சணையாக 30 பவுன் நகைகள், ரூ. 50ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.3லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை நாகேசு வரியின் குடும்பத்தினர் வழங்கி யுள்ளனர். இந்த நிலையில் 25-7-2022 அன்று மேலும் 10 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கப்பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தி உதயசங்கர் தனது மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.

    உதயசங்கருக்கு ஆதர வாக அவரது தந்தை ராஜவேலு, தாய் மீனா, அண்ணன் ரகு ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இதுபற்றி கடந்த மாதம் 10-ந்தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் உதயசங்கர், அவரது தந்தை ராஜவேலு, தாய் மீனா, அண்ணன் ரகு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உதயசங்கர் பட்டதாரி என்றாலும் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை ராஜவேலு ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தாய் மீனா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கம்பத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    கம்பம் பஸ் நிலையம் அருகே உள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி மகள் மதுமிதா (வயது26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் புவனேஷ் என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது 40 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. திருமணமான சில நாட்களிலேயே மதுமிதாவிடம் மேலும் ரூ.20 லட்சம் வாங்கி வரச்சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.

    இதில் ரூ10 லட்சத்தை தாய் வீட்டில் இருந்து மதுமிதா வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ரூ.10 லட்சத்தை வாங்கி வரச்சொல்லி உள்ளனர்.

    தாமதமானதால் புவனேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுமிதாவை கொடுமைப்படுத்தி உள்ளனர். சம்பவத்தன்று புவனேஷ், மதுமிதாவை தாக்கி மிரட்டி உள்ளார்.

    இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம் மதுமிதா புகார் அளித்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுபடி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் புவனேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×