என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boyfriend Dead"

    • கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் வாலிபர் சிகிச்சையில் இருந்த போது பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.
    • காதலியான சிறுமி விஷம் கொடுத்து தன்னை கொலை செய்து விட்டதாக பரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

    சென்னை:

    சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரும், ராமநாதபுரத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத வாலிபர் ஒருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகினர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த பழக்கம் காதலாக மாறியது.

    இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அண்ணாநகர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வாலிபரை கைது செய்தனர்.

    18 வயது ஆகாத நிலையில் அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்ததால் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அடைத்தனர். இதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.

    தற்போது 18 வயது ஆகி விட்ட நிலையில் திருப்போரூரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்தார். இதன் பின்னரும் சிறுமியை மறக்க முடியாத நிலையில் வாலிபர் அவருடன் தொடர்பு கொண்டு உள்ளார். இருவருக்குமிடையே மீண்டும் காதல் மலர்ந்தது. அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேட்டில் வைத்து இருவரும் சந்தித்து பேசினார்கள். இதுபற்றி தெரியவந்ததும் சிறுமியின் உறவினர்கள் அங்கு விரைந்து சென்று வாலிபரை அடித்து உதைத்தனர். சிறுமியை தங்களோடு அழைத்துச் சென்றதுடன் வாலிபரை எச்சரித்துவிட்டும் சென்றனர்.

    இதனால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து உயிருக்கு போராடினார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு போலீசார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வாலிபர் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 14-ந்தேதி உயிரிழந்தார்.

    இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனை செய்து வாலிபரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே வாலிபரின் மரணத்தில் திடுக்கிட வைக்கும் வகையில், காதலியால் விஷம் கொடுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் வாலிபர் சிகிச்சையில் இருந்த போது பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் காதலியான சிறுமி விஷம் கொடுத்து தன்னை கொலை செய்து விட்டதாக பரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இது போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். வாலிபர் சொல்வது உண்மைதானா? என்பதை கண்டு பிடிப்பதற்காக விஷம் கொடுத்ததாக கூறப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தனர். அப்போது வாலிபர் பொய்யான வாக்குமூலத்தை அளித்திருப்பதும், சிறுமி மீது பழி போடும் எண்ணத்துடன் செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து சிறுமி தப்பியுள்ளார். அறியாத பருவத்தில் ஏற்படும் காதல் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் பெரிய சாட்சியாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்றுள்ளார்.
    • காருக்குள் உடல் அழுகியநிலையில் இரண்டு சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஆண்டோனியோ நகரை சேர்ந்தவர் சவானா நிக்கோல் சோடோ (வயது 18). அதே பகுதியை சேர்ந்த இசைக்கலைஞரான மேத்யூ குரேரா (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிவீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது தனது தாயுடன் சவானா போனில் பேசி வந்துள்ளார்.

    இதனிடையே சவானா கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான சவானாவுக்கு இந்த மாத இறுதியில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் தேதி குறித்திருந்தனர்.

    இந்தநிலையில் சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்றுள்ளார். அதன்பின்பு இருவரும் வீடு திரும்பவில்லை.

    பதறிபோன அவர்களுடைய பெற்றோர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம் காதல்ஜோடியை வலை வீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான சாலையில் கார் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அந்த கார், மாயமான குரேரா பெயரில் பதிவாகி இருந்தது தெரிந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த காரை சோதித்தனர். அப்போது காருக்குள் உடல் அழுகியநிலையில் இரண்டு சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.

    விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் சவானா மற்றும் அவருடைய காதலன் குரேரா என தெரிந்தது. உடல்கள் அழுகியநிலையில் இருந்ததால் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பதை போலீசாரால் உறுதியாக கூற முடியவில்லை.

    உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாயமான இளம் காதல்ஜோடி இறந்தநிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விளையாட்டின்போது காதலர் ஜார்ஜ் டோரசை சாரா ஒரு சூட்கேசுக்குள் வைத்து பூட்டினார்.
    • வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரை சேர்ந்த பெண் சாரா பூன் (வயது 47). இவரும் ஜார்ஜ் டோரஸ் (42) என்பவரும் காதலித்து வந்தனர். ஒரே வீட்டில் வசித்து வந்த இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி வீட்டுக்குள் கண்ணாமூச்சி விளையாடினர். இருவரும் அதீத மதுபோதையில் இந்த விளையாட்டை விளையாடினர். விளையாட்டின்போது காதலர் ஜார்ஜ் டோரசை சாரா ஒரு சூட்கேசுக்குள் வைத்து பூட்டினார்.

    பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் சாரா, காதலன் தாமாக சூட்கேசில் இருந்து வெளியே வருவார் என நினைத்துக் கொண்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலை எழுந்து காதலனை தேடினார். பின்னர் அவரை சூட்கேசுக்குள் வைத்து பூட்டியது நினைவு வந்து பதறியடித்துக் கொண்டு சூட்கேசை திறந்தார். அப்போது ஜார்ஜ் டோரஸ் சூட்கேசுக்குள் பிணமாக கிடந்தார். அவர் மூச்சு திணறலுக்கு ஆளாகி இறந்தது தெரியவந்தது.

    இந்த விவகாரத்தில் சாராவை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த திங்கட்கிழமை நடந்தது. இதில் சாரா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    ×