என் மலர்
நீங்கள் தேடியது "Ayyampettai suicide"
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே திருமணத்தை ஒரு ஆண்டு தள்ளி வைத்ததால் மனமுடைந்த புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே மேல வழுத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் ஈஸ்வரி. இவருக்கும், உறவினர் மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஈஸ்வரியின் பெற்றோர் திருமணத்தை ஒருவருடத்துக்கு பின் நடத்த முடிவு செய்தனர். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தீயை அணைத்தனர். ஆனால் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்த ஈஸ்வரி வீட்டிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஈஸ்வரியின் தாயார் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.