search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayanavaram girl molested"

    அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கேட்டு கைதானவர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Chennaigirlharassment
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பலரால் பாலியல் கொடுமைக்கு உள்ளானார்.

    அந்த அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகவும், லிப்ட் ஆப்ரேட்டர்களாகவும் வேலை பார்த்தவர்கள் உள்பட 17 பேர் அந்த சிறுமியை கடந்த 6 மாதங்களாக பாலியல் கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி சோர்ந்து போன நிலையில் காணப்பட்டாள். அந்த சிறுமியிடம், அவளது அக்காள் விசாரித்தபோது தான் இந்த கொடூரம் வெளி வந்தது.

    இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் குற்றப்பத்திரிகையின் நகல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிலர், இந்த வழக்கை அயனாவரம் போலீசார் விசாரிப்பது நியாயமாக இருக்காது.


    அதனால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கையுடன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். அப்போது போலீஸ் தரப்பில் சிறப்பு வக்கீல் என்.ரமேஷ் ஆஜாராகி, தமிழக போலீசார் இந்த வழக்கை நியாயமாகவும் சட்டப்படியாகவும் விசாரித்து வருகின்றனர்.

    அந்த விசாரணையில் உள்நோக்கம் உள்ளது என்றோ, தன்னை வேண்டுமென்றே போலீசார் உள்நோக்கத்துடன், தனிப்பட்ட பகையுடன் கைது செய்து விட்டனர் என்றோ மனுதாரர்கள் கூறவில்லை.

    இந்த வழக்கின் விசாரணை விவர ஆவணத்தை (கேஸ் டைரியை) இந்த கோர்ட்டு ஆய்வு செய்யலாம்’ என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி பிறப்பித்தார். அதில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பதற்கு சரியான காரணங்களை மனுதாரர்கள் கூறவில்லை. அதனால் வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார். #Chennaigirlharassment
    அயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கில் போலீசார் தரப்பில் ஆஜராக மத்திய அரசின் மூத்த வக்கீலான என்.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் போலீசார் தரப்பில் ஆஜராக மத்திய அரசின் மூத்த வக்கீலான என்.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. பரிந்துரையின் பேரில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். மூத்த வக்கீல் என்.ரமேஷ் 21 ஆண்டுகள் வக்கீல் தொழிலில் இருந்து வருகிறார். பல்வேறு சிவில், கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.  #ChennaiGirlHarassment #POCSOAct

    சென்னையில் சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் கைதான 17 குற்றவாளிகளை இன்று முதல் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. #chennaigirlharassment
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக, அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக பணிபுரிந்த ரவிகுமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் இவர்கள் 6 மாதங்களுக்கும் மேலாக அந்த சிறுமியை மிரட்டி கற்பழித்து வந்தது தெரிய வந்தது.

    கைதான 17 பேரும் சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அனைவரும் புழல் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டனர். வருகிற 31-ந்தேதி வரை இவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    குற்றவாளிகளை உறுதி செய்வதற்கான அடையாள அணிவகுப்பு புழல் சிறையில் நேற்று நடந்தது. எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகள் ரோகித்துரை, கலைபொன்னி ஆகியோர் முன்னிலையில் இது நடைபெற்றது.

    கற்பழிப்பு குற்றவாளிகளுடன் அதே வயதுடைய வேறு குற்றவாளிகள் 10 பேரும் நிறுத்தப்பட்டனர். இதில் குற்றவாளிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டினாள்.

    இந்த நிலையில், குற்றவாளிகள் 17 பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்ற மகளிர் நீதிமன்றம், கற்பழிப்பு குற்றவாளிகளை 5 நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

    இதையடுத்து, குற்றவாளிகள் 17 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கிறார்கள். அவர்களிடம் இன்று முதல் 5 நாட்கள் விசாரணை நடத்துகிறார்கள். #chennaigirlharassment
    புழல் ஜெயிலில் கற்பழிப்பு குற்றவாளிகள் 17 பேரின் அடையாள அணிவகுப்பு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் இன்று நடந்தது. அப்போது கற்பழிப்பு குற்றவாளிகளை சிறுமி அடையாளம் காட்டினார். #chennaigirlharassment #PuzhalJail
    செங்குன்றம்:

    அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக சிறுமியை மிரட்டி கற்பழித்து வந்தது விசாரணையில் தெரிந்தது.

    கைதான 17 பேரும் சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை வக்கீல்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் நடந்தது. இதைதொடர்ந்து குற்றவாளிகள் 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை வருகிற 31-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் புழல் ஜெயிலில் கற்பழிப்பு குற்றவாளிகள் 17 பேரின் அடையாள அணிவகுப்பு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் இன்று நடந்தது.

    இதற்காக எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகள் கலைபொன்னி, ரோகித் ஆகியோர் வந்து இருந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரும் வரவழைக்கப்பட்டு இருந்தார்கள்.

    கற்பழிப்பு குற்றவாளிகளுடன் அவர்களது சம வயதுடைய மேலும் 10 கைதிகள் நிறுத்தப்பட்டனர். அவர்களில் குற்றவாளிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டினார். #chennaigirlharassment #PuzhalJail
    சென்னையில் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் ஊசி மருந்தை விற்பனை செய்ததாக கூறப்படும் கடைக்காரர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை அயனாவரம் மகளிர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளிகள் போதை ஊசி போட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    போதை ஊசியை பயன்படுத்தவில்லை என்று கைதான குற்றவாளிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் போலீஸ் விசாரணையில் பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைப்பதற்காக பயன்படுத்தும் ஊசி மருந்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்தியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ‘லிப்ட்’ இயக்கும் ஊழியர் ரவிக்குமார் ஆரம்ப காலத்தில் அயனாவரம் பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் ஊழியராக வேலை செய்துள்ளார். அந்த சமயத்தில் பிரசவத்தின்போது பெண்களுக்கு வலி ஏற்படாமல் தடுப்பதற்காக போடப்படும் ஊசி மருந்து பற்றி அவர் தெரிந்து வைத்துள்ளார்.

    அவர்தான் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குறிப்பிட்ட ஊசி மருந்தை போட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஊசி மருந்தை விற்பனை செய்ததாக கூறப்படும் 3 மருந்து கடைக்காரர்களிடமும் விசாரணை நடக்கிறது.

    இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 குற்றவாளிகளுக்கும் விரைவில் அடையாள அணிவகுப்பு நடைபெற உள்ளது. புழல் மத்திய சிறையில் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் இந்த அடையாள அணிவகுப்பு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளையும் போலீசார் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ உதவிகள் செய்ய மருத்துவர்கள் குழு அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை சேர்ந்த 6 மருத்துவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பொது மருத்துவம், உளவியல், இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம் மற்றும் மகளிர் நோயியல் ஆகிய துறைகளை சேர்ந்த மருத்துவ பேராசிரியர்கள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ உதவிகள் வழங்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சிறுமிக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் டாக்டர்களின் பெயர்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மேலும் இந்த டாக்டர்கள் குழுவினர் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    சென்னையில் கற்பழிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு, போதை ஊசி போட்டது பற்றி போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமி, 17 காமக்கொடூரன்களால் கற்பழித்து சீரழிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில், இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது.

    சிறுமிக்கு பாலியல் கொடுமை நடந்த, குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு முன்பு, பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புக்குள் வசிப்பவர்களை தவிர வெளியாட்கள் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. காவலாளிகளே சிறுமியை நாசமாக்கியதால் அங்கு வசிப்பவர்களுக்கு காவலாளிகள் மீதுள்ள நம்பிக்கை போய்விட்டது. இதனால் அங்கு வசிப்பவர்களே தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக காவல்பணியில் ஈடுபடுகிறார்கள். அயனாவரம் பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள்.

    இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கை மிகவும் கவனமாக விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த தகவல் அடிப்படையில் தான் 17 பேரையும் கைது செய்துள்ளோம். தற்போதைய நிலவரப்படி இந்த வழக்கில் 17 பேர் தான் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் சிறுமியை பெரும்பாலும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும், பள்ளிக்கு செல்லாத நேரத்திலும், தங்கள் இச்சைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். பெரும்பாலும் கழிவறையில் வைத்தே பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.

    “நீல நிறத்தில் உள்ள போதை ஊசியை தனக்கு கத்தி முனையில் மிரட்டி போட்டுவிடுவார்கள் என்றும், போதை ஊசியைப் போட்ட உடன் மயக்க நிலை வந்துவிடும்” என்றும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், அந்த போதை ஊசியின் பெயர் என்ன? என்பது பற்றி சிறுமியால் சொல்லமுடியவில்லை. இதுபற்றி கைதான 17 பேரிடமும் விசாரித்துவிட்டோம். அவர்கள் போதை ஊசி பயன்படுத்தவில்லை என்று மறுத்துவிட்டனர். இருந்தாலும் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கைது செய்யப்பட்டவர்களை தேவைப்பட்டால் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம். விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    நேற்று இந்த வழக்கு தொடர்பாக, கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தடயங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரும், புழல் மத்திய சிறையில், தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடைக்கப்பட்டுள்ள அறை மிகவும் பெரிய அறையாகும்.

    அவர்கள் அடைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மற்ற கைதிகள் செல்ல சிறை காவலர்கள் அனுமதிக்கவில்லை. மற்ற கைதிகள் இவர்களை தாக்கக்கூடும் என்பதற்காக இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    17 பேரும், மிகவும் பதற்றமாகவும், சோர்ந்த முகத்தோடும் காணப்பட்டனர். நேற்று அவர்கள் சரிவர சாப்பிடவில்லை. சாப்பிடும் நேரத்தில் கூட, அவர்களுடன் சிறை காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.  #ChennaiGirlHarassment #POCSOAct
    ×