search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athithanar College"

    • ஆதித்தனார் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு சதுரங்க போட்டி நடத்தப்பட்டது
    • போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சதுரங்க கிளப்பின் சார்பாக மாணவ-மாணவிகளுக்கு சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. சதுரங்க கிளப்பின் இயக்குனர் சி.மோதிலால் தினேஷ் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமையுரை ஆற்றினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் மற்றும் உடற்கல்வியியல் துறை தலைவர் டிஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 60 மாணவர்கள் பங்கு பெற்றனர். போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக பரிசுகள் அறிவிக்கப்பட்டது.

    பெண்கள் பிரிவில் முதல் பரிசை செந்தூர்தேவியும், 2-ம் பரிசை விஜயலெட்சுமியும், 3-ம் பரிசை மதுபாலா, வனசக்திகனி மற்றும் குணவதி ஆகியோர் பெற்றனர். மேலும் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை பெ.செல்வவிநாயகம், 2-ம் பரிசை சி.ஜெய்சுதன், 3-ம் பரிசை சு.யோகலிங்கம், சு.சுவிட்சன் தாமஸ் மற்றும் மொ.அப்துல் ரசாக் ஆகியோரும் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளை கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவ செயலர் எஸ்.ஜெய்சுதன் நன்றி கூறினார்.

    • ஆதித்தனார் கல்லூரியில் கணிப்பொறித்துறை சம்பந்தமான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் வெற்றி கோப்பை வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணிப்பொறித் துறை சார்பில் கணிப்பொறித்துறை சம்பந்தமான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது. இதன் தொடக்க விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கணிப்பொறித்துறை தலைவர் வேலாயுதம் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில் கல்லூரிக்கு இடையேயான போட்டிகளின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். கல்லூரிச் செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேப்பர் பிரசன்டேசன், மென்பொருள் தவறுகளைக் கண்டுபிடித்து சரிசெய்தல், வினாடிவினா, இணையதள வடிவமைப்பு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் து.சி. மகேந்திரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழும், வெற்றி கோப்பையும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர் சி.வேலாயுதம் ஆலோசனையின் பேரில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை இன்பரோஜா மற்றும் பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், பிரீத்தி, பிருந்தா, ஆய்வக உதவியாளர் மாதவன் மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
    • விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.

    விலங்கியல் துறைத்தலைவர் டாக்டர் சுந்தரவடிவேல் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆதித்தனார் பொருளியல் துறைத்தலைவர் டாக்டர் ரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். டாக்டர் வசுமதி விலங்கியல் துறை ஒருங்கிணைப்பாளர், மாணவச் செயலர் சரவணன், துணைச்செயலர் ஹரிகரன் மற்றும் சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் முகமாக அவர்களுக்கு வினாவிடை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் லிங்கதுரை மற்றும் டாக்டர் மணிகண்ட ராஜா செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியை டாக்டர் ஆரோக்கியமேரி பெர்ணான்டஸ் தொகுத்து வழங்கினார். டாக்டர் வசுமதி நன்றி கூறினார்.

    • செயற்குழு கூட்டத்திற்கு முதல்வரும், பயின்றோர் கழக தலைவருமான து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.
    • ஆண்டு விழா பொதுக்குழுவில் பயின்றோர் கழக புதிய உறுப்பினர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பயின்றோர் கழக ஆண்டு விழா வருகிற15-ந் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறுகிறது. அதில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தனித்தனியாக நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு பயின்றோர் கழக செயற்குழு கூட்டம் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வரும், பயின்றோர் கழக தலைவருமான து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் ஜெயபோஸ், பொருளாளர் பகவதி பாண்டியன், இணைசெயலாளர் கதிரேசன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயசிங் சாம்ராஜ், சித்திரைராஜா, ராஜன் ஆதித்தன், பாலமுருகன், மூகாம்பிகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் வருகிற 15-ந் தேதி ஆண்டு விழா பொதுக்குழுவில் பயின்றோர் கழக புதிய உறுப்பினர்களை தேர்வு செய்தல், விழாவில் பயின்றோர் கழக உறுப்பினர்களை அதிகமாக பங்கேற்க வைத்தல், ஓய்வு பெற்ற மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர் அலுவலர்களை பாராட்டுதல், கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடத்தி பரிசு வழங்குதல், பிற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளை செப்டம்பரில் நடைபெறும் கல்லூரி நிறுவனர் சி.பா.ஆதித்தனார், நிறுவன தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவில் நடத்துதல் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×