என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடக்க விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விலங்கியல் மன்ற தொடக்க விழா
- திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
- விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
விலங்கியல் துறைத்தலைவர் டாக்டர் சுந்தரவடிவேல் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆதித்தனார் பொருளியல் துறைத்தலைவர் டாக்டர் ரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். டாக்டர் வசுமதி விலங்கியல் துறை ஒருங்கிணைப்பாளர், மாணவச் செயலர் சரவணன், துணைச்செயலர் ஹரிகரன் மற்றும் சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் முகமாக அவர்களுக்கு வினாவிடை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் லிங்கதுரை மற்றும் டாக்டர் மணிகண்ட ராஜா செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியை டாக்டர் ஆரோக்கியமேரி பெர்ணான்டஸ் தொகுத்து வழங்கினார். டாக்டர் வசுமதி நன்றி கூறினார்.