search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணிப்பொறி துறையில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள்
    X

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணிப்பொறி துறையில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள்

    • ஆதித்தனார் கல்லூரியில் கணிப்பொறித்துறை சம்பந்தமான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் வெற்றி கோப்பை வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணிப்பொறித் துறை சார்பில் கணிப்பொறித்துறை சம்பந்தமான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது. இதன் தொடக்க விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கணிப்பொறித்துறை தலைவர் வேலாயுதம் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில் கல்லூரிக்கு இடையேயான போட்டிகளின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். கல்லூரிச் செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேப்பர் பிரசன்டேசன், மென்பொருள் தவறுகளைக் கண்டுபிடித்து சரிசெய்தல், வினாடிவினா, இணையதள வடிவமைப்பு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் து.சி. மகேந்திரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழும், வெற்றி கோப்பையும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர் சி.வேலாயுதம் ஆலோசனையின் பேரில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை இன்பரோஜா மற்றும் பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், பிரீத்தி, பிருந்தா, ஆய்வக உதவியாளர் மாதவன் மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×