search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appoints"

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களாக 10 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். #Congress #NationalSpokespersons
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இருந்து வருகிறார். இவர் தலைமை பொறுப்பு ஏற்றது முதல் கட்சியில் சில மாற்றங்களை செய்து வருகிறார்.

    இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களாக 10 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பவான் கெரா, ராகினி நாயக், ராஜிவ் தியாகி, அகிலேஷ் பிரதாப் சிங், கவுரவ் வல்லப், ஜெய்வீர் ஷெர்கில் சையத் நசீர் உசைன், ஹீனா கவாரே, ஸ்ரவன் டாசோஜ் மற்றும் சுனில் அஹிரே ஆகியோர் புதிய தேசிய செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது. #Congress #NationalSpokespersons
    ட்ராய் அமைப்பின் தலைவராக இருந்துவந்த ராம் சேவாக் ஷர்மா அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் ட்ராய் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #TRAI #RamSewakSharma
    புதுடெல்லி:

    ட்ராய் எனப்படும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ராம் சேவாக் ஷர்மா. இவர் இதற்கு முன்னர் ஆதார் ஆணையத்தின் இயக்குனராக பணிபுரிந்தார். இவர் சமீபத்தில் தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்டு, முடிந்தால் இந்த ஆதார் எண்ணை பயன்படுத்தி எனக்கு பாதகம் விளைவிக்க முயற்சியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

    இவரது இந்த ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர், இந்த சவாலை ஏற்று, ஷர்மாவின் முழு விவரங்களையும் ட்விட்டரில் பதிவிட்டார். அதுமட்டுமின்றி, அவருடைய வங்கி கணக்கில் 1 ரூபாய் பணத்தை டெபாசிட்டும் செய்தார்.

    இந்த சம்பவம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆதார் மீது இருந்த குறைந்தபட்ச நம்பகத்தன்மையும் இதனால் பறிபோனதாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இவ்வாறு தனது ஆதார் எண்ணை பதிவிட்டதன்மூலம் ஒரே இரவில் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஷர்மா தற்போது மீண்டும் ட்ராய் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2020-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை இவரது பதவிக்காலம் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TRAI #RamSewakSharma
    அமெரிக்காவில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் பொறுப்பு நிர்வாகியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் துணை உதவியாளராகவும் இருந்து வந்தவர் உத்தம் தில்லான் நியமிக்கப்பட்டு உள்ளார். #DonaldTrump #UttamDhillon
    வாஷிங்டன்:

    வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் துணை வக்கீலாகவும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் துணை உதவியாளராகவும் இருந்து வந்தவர் உத்தம் தில்லான். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

    இவர், போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இந்தப் பதவியில் இருந்து வந்த ராபர்ட் பேட்டர்சன் என்பவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, உத்தம் தில்லான் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்று உள்ளார்.



    இந்தப் பதவி, அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பதவி ஆகும்.

    உத்தம் தில்லான் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ், இதுபற்றி கூறுகையில், “அமெரிக்காவில் போதைப்பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஒவ்வொரு 9 நிமிடத்திலும் ஒருவர் உயிரிழக்கின்றனர். எனவே நமது வரலாற்றில் போதைப் பொருள் உபயோகத்தால் அதிகபட்ச உயிரிழப்புகளை சந்தித்து வருகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை” என குறிப்பிட்டார்.

    உத்தம் தில்லான், வெள்ளை மாளிகையில் மட்டுமல்லாது, நீதித்துறை, உள்நாட்டு பாதுகாப்புத்துறை, நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றில் பணியாற்றிய நீண்ட அனுபவம் மிக்கவர்.  #DonaldTrump #UttamDhillon #tamilnews
    ×