என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna University Vice Chancellor"

    • FIR கசிந்ததற்கு மத்திய அரசு நிறுவனத்தின் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம்.
    • மகளிருக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் 3-ம் நாள் நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் இடையே விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    உண்மையான அக்கரையோடு சில உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள். அவையில் ஒருவர் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக பேசினார்.

    சென்னையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மாபெரும் கொடூரம். பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று நியாயம் பெற்று தருவதே அரசின் நோக்கம்.

    குற்றம் நடந்தபின் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்படாமல் இருந்தால் நீங்கள் எங்களை குறை சொல்லலாம். குற்றம் நடந்தது அறிந்த உடனேயே காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு அடுத்த நாளே குற்றவாளி கைது.

    FIR கசிந்ததற்கு மத்திய அரசு நிறுவனத்தின் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் கேமரா இல்லை, பாதுகாப்பு இல்லை என பொத்தம் பொதுவாக குற்றச்சாட்டுவது நியாயமில்லை.

    குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிக்கு உச்சபச்ச தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்யும்.

    முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்து யார் அந்த சார் என கேட்கிறீர்கள். யார் அந்த சார் என்பதற்கு ஆதாரம் இருந்தால் உயர்நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவிடம் கொடுங்கள்.

    மகளிருக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழகம் தான்.

    மாணவி விவகாரத்தில் மலிவான அரசியலை செய்ய வேண்டாம் என்றார். 

    மறு தேர்வு நடத்தும் கால அவகாசத்தை குறைத்தால் ஊழலை தடுக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறி உள்ளார். #AnnaUniversity
    சென்னை:

    தேர்வுத்தாள் மறு மதிப்பீடு ஊழல் குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பேட்டியளித்துள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    தேர்வுத் துறையில் முறைகேடு நடந்திருப்பதாக எனக்கு தகவல் வந்ததுமே அது பற்றி விசாரிக்க ஒரு குழு அமைத்தேன். அந்த முறைகேடுகளில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.

    முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்களும் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



    தேர்வுத்தாள் மறு மதிப்பீட்டு ஊழலில் நிறைய பேருக்கு தொடர்புள்ளது. கல்லூரிகள் மூலம்தான் பெரிய அளவில் இந்த முறைகேடு நடந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இதில் தொடர்பில்லை. கல்லூரிகள் அளவில்தான் இவையெல்லாம் நடந்துள்ளது. 10, 12 ஆண்டுகளாக அரியர்ஸ் வைத்திருப்பவர்களால் இத்தகைய முறைகேடுகள் நடக்க காரணமாகி விடுகின்றன.

    இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் மறு தேர்வு நடத்தும் கால அவகாசத்தை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். 6 ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் இந்த பிரச்சினை வராது.

    தேர்வுத்தாள் மறு மதிப்பீடுக்கு மனு செய்த அனைத்து மாணவர்களும் பணம் கொடுத்து மதிப்பெண் பெற்றவர்கள் என்று சொல்ல முடியாது. சில மாணவர்களே அந்த முறைகேடுகளை செய்துள்ளனர்.

    தேர்வு மற்றும் மதிப்பீடு பணிகளில் மாற்றங்கள் செய்வதன் மூலமாக மட்டுமே இந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்த முடியும். அண்ணா பல்கலைக்கழக பணிகளில் எந்த ஊழலும் நடந்து விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

    இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார். #AnnaUniversity

    ×