search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambedkar memorial"

    • அம்பேத்கர் நினைவுநாளில் பைக்குகளில் வந்து போலீசாரிடம் தகராறு செய்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • இதையடுத்து 3 மோட்டார் சைக்கிள்களில் வீலிங் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தலைமறைவான 5-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதற்காக மாநகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அன்று மதுரை சிந்தாமணி பஸ் நிறுத்த சந்திப்புக்கு, 3 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் இருந்த வாலிபர்கள் வீலிங் செய்து அமளியில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் எச்சரித்தனர். அந்த கும்பல் போலீசாரை சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டனர். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அந்த கும்பல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 மோட்டார் சைக்கிள்களில் வீலிங் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தலைமறைவான 5-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தாதர் இந்து மில்லில் 2020-ம் ஆண்டுக்குள் அம்பேத்கர் நினைவிடம் கட்டப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். #CMDevendraFadnavis
    மும்பை :

    மும்பை தாதரில் உள்ள இந்து மில்லில் சட்டமேதை அம்பேத்கருக்கு மராட்டிய அரசு பிரமாண்ட நினைவிடம் கட்டுகிறது.

    இருப்பினும் அதற்கான கட்டுமான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை. அங்கு அம்பேத்கர் நினைவிடம் கட்டுவதற்கான பணியை விரைவில் அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இதுபற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    தாதர் இந்து மில்லில் அம்பேத்கர் நினைவிடம் 2020-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கரின் நினைவு தினத்தன்று சைத்ய பூமிக்கு வரும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

    எனவே 2020-ம் ஆண்டுக்கு பின் சைத்ய பூமி வரும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

    இதேபோல நாக்பூரில் உள்ள தீக்சா பூமியிலும் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #CMDevendraFadnavis
    ×