போலீசாரிடம் தகராறு செய்த கும்பல் மீது வழக்கு

அம்பேத்கர் நினைவுநாளில் பைக்குகளில் வந்து போலீசாரிடம் தகராறு செய்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து 3 மோட்டார் சைக்கிள்களில் வீலிங் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தலைமறைவான 5-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீசாரிடம் தகராறு செய்த கும்பல் மீது வழக்கு
Published on

மதுரை

அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதற்காக மாநகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அன்று மதுரை சிந்தாமணி பஸ் நிறுத்த சந்திப்புக்கு, 3 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் இருந்த வாலிபர்கள் வீலிங் செய்து அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் எச்சரித்தனர். அந்த கும்பல் போலீசாரை சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டனர். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த கும்பல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 மோட்டார் சைக்கிள்களில் வீலிங் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தலைமறைவான 5-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com