search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "53 வேட்பாளர்கள்"

    திருவண்ணாமலை மற்றும் ஆரணி, அரக்கோணம் மக்களவை தொகுதியில் 53 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் பதிவான வாக்குகளில், 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருந்தால் செலுத்தப்பட்ட டெபாசிட் தொகையை வேட்பாளர் தக்க வைத்துக் கொள்வார்கள்.

    திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ்பாபு (27,503) வாக்குகள்), மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருள் (14,654 வாக்குகள்), அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஞானசேகர் (38,639 வாக்குகள்) உட்பட 23 வேட்பாளர்கள், தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

    6,66,272 வாக்குகளை பெற்று தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையும், 3,62,085 வாக்குகளை பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டனர்.

    ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழரசி (32,409 வாக்குகள்), மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஷாஜி (14,776 வாக்குகள்) அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தமிழன் (46,383 வாக்குகள்) உட்பட 13 வேட்பாளர்கள், டெபாசிட் தொகை இழந்துள்ளனர்.

    6,17,760 வாக்குகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தும், 3,86,954 வாக்குகளை பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் ஏழுமலையும் டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டனர்.

    ஆரணி மக்களவை தொகுதியில் பதிவான 11,14,699 வாக்குகளில் 1,90,284 வாக்குகளை பெற்றிருந்தால் டெபாசிட் தொகை திரும்ப கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 6 லட்சத்து 72 ஆயிரத்து 190 வாக்கு பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 3 லட்சத்து 43 ஆயிரத்து 234 ஓட்டு பெற்று தோல்வியடைந்தார்.

    இவர்களை தவிர இந்த தொகுதியில் போட்டியிட்ட 17 வேட்பாளர்கள் டெபாசிட் இழுந்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று இரவு 8 மணியளவில் ரிக்டரில் 5.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #Earthquake
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
     
    இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர். இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. #Earthquake
    ×