search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 youths died"

    காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பந்தார அள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் வினோத்குமார் (வயது25). இவர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் மையத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும் அதே ஊரை சேர்ந்த அன்பு என்பவரின் மகன் ஸ்ரீநாத் (20) ஆகிய இருவரும் நேற்று தருமபுரிக்கு தனது நண்பர்களை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    அப்போது அங்கு நண்பர்களுடன் அவர்கள் புத்தாண்டு கொண்டாடினர். பின்னர் முடித்து விட்டு நள்ளிரவு அங்கிருந்து வினோத்குமார், ஸ்ரீநாத் ஆகிய 2 பேரும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    காரிமங்கலம்- திப்பம்பட்டி சாலை தெல்லனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே செல்லும் போது அந்த வழியாக கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புத்தாண்டு தொடக்கத்திலேயே தங்கள் கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் இறந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தனர்.
    ஆலங்குளம்:

    திண்டுக்கல் மாவட்டம் கரியாபட்டிணத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது35). இவரது நண்பர் சஞ்சீவ்குமார் (26). இருவரும் நெல்லையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று இவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் குற்றாலத்திற்கு சென்றனர். இரவு ஊர் திரும்பினர்.

    ஆலங்குளம் அருகே உள்ள சீதபற்பநல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்த போது எதிரே கேரளாவுக்கு லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது.

    எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் ரவிச்சந்திரன், சஞ்சீவ்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சீதபற்பநல்லூர் மற்றும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பலியான 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இது தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கேரளாவை சேர்ந்த லாரி டிரைவர் அசரப் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேப்பூர் அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் பாலவிளையை சேர்ந்தவர் அஜீத்ஜோகி (வயது 21). இவரது உறவினர் வினோத் (21). இவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

    ஆயுதபூஜை விடுமுறையையொட்டி இருவரும் சொந்த ஊர் சென்றிருந்தனர். விடுமுறை முடிந்ததும் நேற்று மதியம் அஜித்ஜோகி, வினோத் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் பாலவிளையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அஜீத்ஜோகி, வினோத் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சிமேரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    விபத்தில் பலியான 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வாலிபர்கள் மீது மோதிய வாகனம் எது? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×